செய்திகள் :

``நிலவேம்பு, பப்பாளி பயன்பாடு: கட்டுக்குள் டெங்கு; பரவும் உண்ணிக் காய்ச்சல்" - அருண்ராஜ் தகவல்!

post image

தமிழ்நாடு முழுவதும் டெங்கு, உன்னிக் காய்ச்சல், ஃபுளூ காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதிய செவிலியர் கல்லூரிகளுக்கான செவிலியர் ஆசிரியர் (Tutor) பணியிடங்களை நிரப்புவது குறித்து நிலவும் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் எம்.எஸ்.சி. நர்சிங் முடித்து அரசு மருத்துவமனைகளில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களைச் செவிலியர் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தகுதியின் அடிப்படையில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலை சாறு அருந்துவதால் ரத்தத் தட்டணுக்கள் (Platelets) அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது. இது குறித்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்டுள்ளோம்.

விரைவிலேயே இது குறித்து மக்கள் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் டெங்கு பாதிப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 2023-ல் 56,863 நபர்களுக்கும், 2024-ல் 46,971 நபர்களுக்கும், 2025-ல் 25,585 நபர்களுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் இதுநாள் வரை (செப்டம்பர் 19 வரை) 17,490 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு அலட்சியமாக இல்லாமல், கொசு ஒழிப்புப் பணியாளர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

டெங்கு

அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மருத்துவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதியாக உள்ளது. டெங்கு பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநகராட்சி, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் அவர்களும் இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். கொசு உற்பத்தியைத் தடுக்கப் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். வீட்டின் அருகில் உள்ள காலி மனைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளில் தொய்வு இருப்பதாகக் கூறப்படும் இடங்களில், மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் பேசி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும், கொசு விரட்டிகளின் பயன்பாடு மற்றும் செயல்திறன் குறித்த ஆய்வு சட்டப்பேரவை அறிவிப்பின்படி அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் இது ஒரு புதிய முயற்சியாகச் செயல்படுத்தப்படும்.

காய்ச்சல்

அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது டெங்குவினால் அல்ல, அது உண்ணிக் காய்ச்சல் எனப்படும் 'ஸ்க்ரப் டைபஸ்' (Scrub Typhus) பாதிப்பினால் ஏற்பட்டதாகும். இதற்கான அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி என டெங்குவைப் போன்றே இருக்கும். உண்ணிப் பூச்சி கடிக்கும் இடத்தில் ஒரு வடு (தழும்பு) காணப்படும். பூங்காக்கள் மற்றும் செடிகள் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று வந்த பிறகு, உடலில் வடுவுடன் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ அணுகுமுறை பெற வேண்டும்.

மாநிலத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 19 வரை 5,142 ஸ்க்ரப் டைபஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இந்த ஆண்டு இதே காலகட்டம் வரை 4,619 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது சுகாதாரத்துறை சார்பில் விரைவில் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்படும். மாலையில் வெளியில் செல்லும் போது கைகால்களை முழுமையாக மூடும் ஆடைகளை அணிவதும், கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதும் நல்லது." என்றார்.

Doctor Vikatan: ஊரெங்கும் பரவும் டெங்கு காய்ச்சல்... தடுப்பு மருந்தாக பப்பாளிச்சாறு குடிக்கலாமா?

Doctor Vikatan:டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பப்பாளி இலைச்சாறும் நிலவேம்புக் கஷாயமும் கொடுக்கச் சொல்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு எந்த அளவுக்கு டெங்கு சிகிச்சைக்கு பலன் அ... மேலும் பார்க்க

டெங்கு: ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு!; தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 253 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: பகல் முழுவதும் உழைப்பு... இரவில் மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை... தீர்வென்ன?

Doctor Vikatan:என் அம்மா பகல் முழுவதும் கடினமாக உழைக்கிறார். ஆனாலும் இரவில் மன அழுத்தம் காரணமாக சரியாக உறங்காமல் டி.வி பார்த்துக் கொண்டே விட்டுவிட்டு உறங்குகிறார். மருத்துவரிடம் அழைத்தாலும் வர மறுக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பச்சிளம் குழந்தைக்கு டயாப்பர் அணிவித்துப் பழக்கலாமா?

Doctor Vikatan: என் தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அவள் குழந்தைக்கு டயாப்பர் போடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள். அது குழந்தைக்கு நல்லதல்ல என்கிறாள்.என் குழந்தைக்கு நான... மேலும் பார்க்க

ஆட்டிசம் சிகிச்சைக்கான 'ஸ்டெம் செல் தெரபி' - மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... விவரம் என்ன?!

ஆட்டிசம் குறைபாட்டுக்கான 'ஸ்டெம் செல் தெரபி' (Stem Cell Therapy) சிகிச்சையை, முறையான அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 16 அன்று புத... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவுவது உண்மையிலேயே பலன் தருமா?

Doctor Vikatan:வயிற்று வலி, உடல் சூடு எனப் பல காரணங்களுக்கும் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவச் சொல்கிறார்களே.... அதன் காரணம் என்ன? அது உண்மையிலேயே வேலை செய்யுமா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் ச... மேலும் பார்க்க