செய்திகள் :

ஆட்டிசம் சிகிச்சைக்கான 'ஸ்டெம் செல் தெரபி' - மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... விவரம் என்ன?!

post image

ஆட்டிசம் குறைபாட்டுக்கான 'ஸ்டெம் செல் தெரபி' (Stem Cell Therapy) சிகிச்சையை, முறையான அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 16 அன்று புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

கிளினிகல் எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கமான சிகிச்சை கிடையாது

உடலில் உள்ள சிறப்பு செல்களைப் பயன்படுத்தி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஸ்டெம் செல் தெரபி குறித்து பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இது அனைத்து நோய்களுக்கும் பொதுவான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமான சிகிச்சை கிடையாது.

மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டுக்கு இந்தச் சிகிச்சை தற்போதுவரை மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இதனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு வணிக ரீதியான சிகிச்சையாக வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி

கடந்த ஜனவரி 30 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Yash Charitable Trust & Ors. v. Union of India வழக்கில், ஸ்டெம் செல் தெரபி தொடர்பான சட்ட மற்றும் மருத்துவ விதிமுறைகளை மருத்துவமனைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, அங்கீகரிக்கப்படாத ஸ்டெம் செல் சிகிச்சைகளுக்கு ஏற்கெனவே கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இதற்கிடையே, தேசிய மருத்துவ ஆணையமும் (NMC) ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு அப்பால் ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்குவது, பரிந்துரைப்பது அல்லது விளம்பரப்படுத்துவது மருத்துவர்களுக்கான தொழில்முறை நெறிமுறை மீறலாகக் கருதப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக்குத் தடையா?

இந்த உத்தரவு ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் முழுவதையும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் (Clinical Trials) மூலம் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். மாறாக, ஆட்டிசத்திற்கு இன்னும் நிரூபிக்கப்படாத இந்த சிகிச்சையை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Doctor Vikatan: தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவுவது உண்மையிலேயே பலன் தருமா?

Doctor Vikatan:வயிற்று வலி, உடல் சூடு எனப் பல காரணங்களுக்கும் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவச் சொல்கிறார்களே.... அதன் காரணம் என்ன? அது உண்மையிலேயே வேலை செய்யுமா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் தீவிரமடையும் காய்ச்சல்: அறிகுறிகளும், தற்காக்கும் வழிமுறைகளும்! - மருத்துவர் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தற்போது இன்ஃப்ளூயன்சா மற்றும் டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிவேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் குறித்த அச்சம் நிலவும் சூழலில், இதன் அறிகுறிகள், பரிசோதனைகள் மற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃபுட் டெலிவரி வேலையால் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன்...தவிர்க்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: நான் ஃபுட் டெலிவரி ஊழியராக இருக்கிறேன். நாள் முழுவதும் டூ வீலரில் சுற்ற வேண்டும். இதனால் சிறுநீர் கழிக்க இடம் தேடி அலைய முடியாது. கழிவறை வசதி உள்ள இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும... மேலும் பார்க்க

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்தல்... நெஞ்சு கரித்தலுக்குத் தீர்வு உண்டா?

Doctor Vikatan:எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்து மேல் வருகிறது. நெஞ்சு கரிக்கும் பிரச்னைக்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க முடியுமா? சிகிச்சை அவசியமா? எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட வேண்டும்?பதில் சொல்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இள வயதினரையும் பாதிக்கும் கேட்டராக்ட் பிரச்னை... வராமல் தடுக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:வயதானவர்களுக்கு வந்துகொண்டிருந்த கேட்டராக்ட் பிரச்னை, இப்போதெல்லாம் இள வயதினருக்கும் வருகிறது. கேட்டராக்ட் பிரச்னை ஏன் வருகிறது... அதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா? வந்த பிறகு நிச்சயம... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எடை... இனிமேல் வாக்கிங் பலன் தராதா?

Doctor Vikatan:என் வயது 52. நான் இத்தனை வருடங்களாக சரியான எடையில்தான் இருந்தேன். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். இப்போது மெனோபாஸ் வந்துவிட்டதால், எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதே உணவ... மேலும் பார்க்க