செய்திகள் :

'அடக்கி வாசிங்க; திமுகவின் ஆதரவால்தான் காங், விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது' - அன்புமணி

post image

பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், "கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

கூட்டணியில் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுவது ஒரு குழப்பமான நிலைப்பாடு, ஆனால், இதில் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. விஜய்க்கு தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று தவெகவினர் மட்டும்தான் சொல்லலாம், சொல்ல முடியும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் எல்லாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுகவின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். இப்போது தவெக பக்கம் வந்துவிட்டார்கள். அதன்பிறகு வீரவசனம் பேசுவது எல்லாம் அர்த்தமில்லை. அடக்கி வாசியுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

`விவசாயிகள் ஏற்றுமதியாளராக மாற வேண்டும்’ - மாம்பழங்களை மதிப்புக்கூட்ட வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டத்தில் சுமார் 5,924 ஹெக்டர் பரப்பளவில் `மா’ பயிர்ச் சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் அதிகமான காலங்களில் விளைப் பொருள்களின் விலை ஏற்றத்தாழ்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையி... மேலும் பார்க்க

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழும் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே, மீண்டும் கடந்த 20 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். மா... மேலும் பார்க்க

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்தருமப... மேலும் பார்க்க

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!'- அமைச்சர் ரமேஷ்

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறைஅமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்... மேலும் பார்க்க