செய்திகள் :

மகாராஷ்டிரா: கையில் குழந்தை; தோளின் மீது விழுந்த பாம்பு; அருவியில் அலறிய மக்கள்! | video

post image

அருவியில் குளிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்ற இடத்தில் திடீரென பாம்பு ஒன்று மேலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் குழந்தையை வைத்திருக்கும் ஒருவரின் தோளிலேயே விழுந்தால்?

மகாராஷ்டிராவின் அம்போலி அருவியில் இப்படியொரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. குடும்பத்துடன் அருவிக்கு வந்திருந்த ஒருவர், சிறு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வழுக்கலான பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மேலே இருந்த பாறைப் பகுதியில் இருந்து பெரிய பாம்பு ஒன்று திடீரென அவரது தோளில் விழுந்தது.

அடுத்த சில நொடிகளில் அங்கு இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையை வைத்திருந்த அந்த நபரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஆனால், அவரது தோளில் இருந்த பாம்பு உடனடியாக கீழே விழுந்து, அருகில் இருந்த பாறை இடுக்குக்குள் புகுந்துவிட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

இந்தக் காட்சியை அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். பாம்பைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியபடி அந்த இடத்தைவிட்டு விலகுவது வீடியோவில் தெரிகிறது. அப்போது ஒருவர், “இது மிகப் பெரிய பாம்பு... இது Cobra” என்று கூறுகிறார். ஆனால், அந்தப் பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பது சரியாக தெரியவில்லை.

சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சஹ்யாத்ரி மலைத் தொடரில் அமைந்துள்ள அம்போலி அருவி, மழைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இந்தச் சம்பவம், அருவிப் பகுதிகளில் சுற்றுலா செல்லும்போது பாறை இடுக்குகள், அடர்ந்த தாவரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதை உணர்த்துகிறது.

Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? - வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்...” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத... மேலும் பார்க்க

விநாயகருக்கு ஆரத்தி தட்டை மாற்றி சுற்றிய சல்மான்கான்; சரி செய்த சகோதரி அர்பிதா - பெண் தோழி பங்கேற்பு

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் சகோதரி அ... மேலும் பார்க்க

ஆதரவாளர்களுடன் மும்பை நோக்கி பேரணி; மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் மனோஜ் ஜராங்கே!

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜல்னாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். மராத்தா மக்களுக்கு சாதிச்சான்று விரைந்து வழங்க வேண்டும் என... மேலும் பார்க்க

`நண்பர்' பிரதமர் மோடியிடம் முறையிட்ட முதியவர்; அபகரித்த நிலத்தை திரும்பக் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!

மும்பை பயந்தர் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி வோரா என்பவர் தனது நிலத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவும், வேறு ஒரு கட்டுமான நிறுவனமும் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த நிலத்தை தான் 1989ம் ஆண்டு விலை... மேலும் பார்க்க

நெல்லை: அரசு திட்டங்கள்... அசுர தாலாட்டு... பிரமாண்ட ராட்டினம்- மக்களை ஈர்க்கும் பொருட்காட்சி! Album

திருநெல்வேலி: தமிழக அரசு திட்டங்கள்!பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களை கவரும் அரசுப் பொருட்காட்சி.! மேலும் பார்க்க

ரூ.3,383 கோடிக்கு சொத்து இருந்தும் மும்பை பா.ஜ.க எம்.எல்.ஏ. தெருக்களில் யாசகம் கேட்டு சென்றது ஏன்?

மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பராக் ஷா. மகாராஷ்டிராவில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக கருதப்படும் பராக் ஷாவிற்கு ரூ.3,383 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. ஏராளமான... மேலும் பார்க்க