செய்திகள் :

ஆதரவாளர்களுடன் மும்பை நோக்கி பேரணி; மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் மனோஜ் ஜராங்கே!

post image

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜல்னாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். மராத்தா மக்களுக்கு சாதிச்சான்று விரைந்து வழங்க வேண்டும் என்று கோரி இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். மும்பையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனோஜ் ஜராங்கே தரப்பில் இரண்டு முறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மும்பையில் இப்போது விநாயகர் சதுர்த்தி விழா முழு வேகத்தில் நடந்து வருவதால் இந்த நேரத்தில் அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி போலீஸார் ஒப்புதல் கொடுக்க மறுத்துவிட்டனர்.

மூன்றாவதாக மேலும் ஒரு கோரிக்கை மனு மனோஜ் ஜராங்கே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 பேருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அனைத்து விதிகளும் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் அனுமதி கொடுக்காவிட்டாலும் மும்பைக்கு வருவேன் என்று கூறி மனோஜ் ஜராங்கே இப்போது ஜல்னாவில் இருந்து ஆதரவாளர்கள் சிலருடன் மும்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் பதினெட்டாவது நாளில், ஜல்னாவில் உள்ள தனது கிராமத்திலிருந்து புறப்பட்ட ஜராங்கே, வரும் 19ம் தேதி மும்பையின் ஆசாத் மைதானத்தில் தனது உண்ணாவிரதத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார். அவரது வாகன அணிவகுப்பு பீட், அகில்யாநகர், புனே மற்றும் ராய்காட் வழியாக மும்பை செல்கிறது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ''சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் பொறுப்பு. கணேஷோத்ஸவத்தின் போது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது.

ஜராங்கேவின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டால் மும்பையில் போராட்டம் நடக்கும். மராத்தா போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளில், சட்டரீதியாகச் செல்லுபடியாகக்கூடிய 12 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் சட்டரீதியான தடைகள் இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்," என்றும் அவர் கூறினார்

இதே போன்று மாநில இணையமைச்சர் ஆஷிஷ் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில்,'' ஜராங்கேவின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. தற்போது தேவையில்லாமல் ஒரு போராட்டத்தை அவர் நீட்டித்து வருகிறார்'' என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் மராத்தா சமூகத்தின் விஷயத்தில் அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகக் குற்றம்சாட்டிய ஜராங்கே, போராட்டத்தைத் தொடரப்போவதாக உறுதியளித்தார். ``நான் அரசுக்கு அடிபணியமாட்டேன்," என்று கூறிய அவர், மராத்தா இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் நீதி பெற்றுத் தருவதே இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? - வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்...” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத... மேலும் பார்க்க

விநாயகருக்கு ஆரத்தி தட்டை மாற்றி சுற்றிய சல்மான்கான்; சரி செய்த சகோதரி அர்பிதா - பெண் தோழி பங்கேற்பு

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் சகோதரி அ... மேலும் பார்க்க

`நண்பர்' பிரதமர் மோடியிடம் முறையிட்ட முதியவர்; அபகரித்த நிலத்தை திரும்பக் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!

மும்பை பயந்தர் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் அலி வோரா என்பவர் தனது நிலத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவும், வேறு ஒரு கட்டுமான நிறுவனமும் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த நிலத்தை தான் 1989ம் ஆண்டு விலை... மேலும் பார்க்க

நெல்லை: அரசு திட்டங்கள்... அசுர தாலாட்டு... பிரமாண்ட ராட்டினம்- மக்களை ஈர்க்கும் பொருட்காட்சி! Album

திருநெல்வேலி: தமிழக அரசு திட்டங்கள்!பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களை கவரும் அரசுப் பொருட்காட்சி.! மேலும் பார்க்க

ரூ.3,383 கோடிக்கு சொத்து இருந்தும் மும்பை பா.ஜ.க எம்.எல்.ஏ. தெருக்களில் யாசகம் கேட்டு சென்றது ஏன்?

மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பராக் ஷா. மகாராஷ்டிராவில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக கருதப்படும் பராக் ஷாவிற்கு ரூ.3,383 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. ஏராளமான... மேலும் பார்க்க

"அந்த இடத்திலேயே இறந்திருப்பேன்" - இடித்து விட்டு தப்பியதாக கார் டிரைவர் மீது டெல்லி பெண் புகார்

டெல்லி அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காரில் வந்த ஒருவர் விரட்டி சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தை காரில் வந்தவர் குறுக்கிட்டார். இதனால் அப்பெ... மேலும் பார்க்க