செய்திகள் :

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

post image

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும்  தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கைக்கு செல்ல திட்டமிட்ட  சிறுவன் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்து கள்ளதனமாக இங்கிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார்.

படகில் இலங்கைக்கு சென்று சிறுவனை, மன்னார் தம்மன்னா கடற்படை முகாமிற்குட்பட்ட ஆதாமின் பாலம் பகுதியில் உள்ள 6-வது மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு, படகோட்டி மீண்டும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகத் கூறப்படுகிறது.

வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மணல் திட்டில் தனியாக நின்றிருந்த சிறுவனை கண்டு சந்தேகமடைந்து அவரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திக்கும் போது, குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன்

மேலும், உரிய ஆவணங்கள் மற்றும் சட்டபூர்வமான நடைமுறைகள் இன்றி கடல் வழியாக எல்லை தாண்டி பயணம் செய்வது ஆபத்தானது என்பதால், இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று ... மேலும் பார்க்க

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை ... மேலும் பார்க்க

`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் ... மேலும் பார்க்க

"அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை" - சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரமேஷ் சென்னித்தலாவுடன் இருக்கும் புகைப்படங்களை அங்குள்ள வெளிநாடு வாழ் கேரளத்தவர்களும், கேரள எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

`மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் அரசியல்' - அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.ச... மேலும் பார்க்க