செய்திகள் :

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்தல்... நெஞ்சு கரித்தலுக்குத் தீர்வு உண்டா?

post image

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் எதுக்களித்து மேல் வருகிறது. நெஞ்சு கரிக்கும் பிரச்னைக்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க முடியுமா? சிகிச்சை அவசியமா? எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் விஷ்ணு அபிஷேக் ராஜு 

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் விஷ்ணு அபிஷேக் ராஜு
இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் விஷ்ணு அபிஷேக் ராஜு

நெஞ்செரிச்சல் மற்றும் உணவு உண்ட பிறகு உணவு மேலே எழும்பி வருவது போன்ற உணர்விற்கு GERD என்று அழைக்கப்படும் 'கேஸ்ட்ரோ ஈசோபேஜியல் ரிஃப்ளெக்ஸ்'  (Gastroesophageal reflux disease) நோய்தான் காரணம். இதையே சம்பந்தப்பட்ட நபர்கள் பொதுவாக 'அசிடிட்டி' அல்லது அமிலத்தன்மை பிரச்னை என்று சொல்கிறார்கள்.

இந்நோய் ஏற்படுவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம். இரண்டாவதாக, உணவுப்பாதை மற்றும் வயிற்றைப் பாதிக்கும் சில நோய்கள்.

இவை சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இணைப்பு திசுக் கோளாறுகள் (connective tissue disorders) போன்ற தொற்றா நோய்களாக இருக்கலாம் அல்லது உணவுப்பாதை மற்றும் வயிற்றைப் பாதிக்கும் தொற்றுகளாகவும் இருக்கலாம்.

இதில் வயிற்றின் அமில உற்பத்தியை அதிகரிக்கும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) தொற்று மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.

உதாரணமாக, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் வயிற்றின் இயல்பு இயக்கத்தைப் பாதித்து, 'கேஸ்ட்ரோபாரெசிஸ்' (gastroparesis) என்ற நிலையை உருவாக்குகிறது. இதுவே அமிலத்தை மேலும் அதிகளவில் மேலே எழும்பச் செய்கிறது.

GERD ஏற்படுவதற்குத் தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை சார்ந்த சிக்கல்களே பொதுவான காரணங்கள் என்பதால், இதை நிச்சயமாகத் தடுக்க முடியும். நமது உடலின் இயல்பு சுழற்சிக்கு (circadian rhythm) ஏற்ப உணவை உட்கொள்வதுடன், அதிக கொழுப்புள்ள மற்றும் புளிப்புச்சுவை கொண்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் நோயாளிகள் அசிடிட்டி அறிகுறிகள் ஏதுமின்றி நிம்மதியாக வாழ முடியும்.

கொழுப்பு மற்றும் புளிப்புத் தன்மையை உணவில் அதிகரிப்பதும் அசிடிட்டியை உண்டாக்கும்.

இந்நோய் ஒருவரது அன்றாட வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்கும்போதோ அல்லது விழுங்குவதில் சிரமம், உடல் எடை குறைதல், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும்போதோ மருத்துவச் சிகிச்சை அவசியமாகிறது.

ஒருவர் தனது பாரம்பர்ய அல்லது வழக்கமான உணவை உண்பதால் மட்டுமே அசிடிட்டி ஏற்படுவதில்லை. இருப்பினும், உணவில் ஏதேனும் ஒரு சத்துப்பொருளின் (macronutrient) அளவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அசிடிட்டி ஏற்படலாம்.

குறிப்பாக, கொழுப்பு மற்றும் புளிப்புத் தன்மையை உணவில் அதிகரிப்பதும் அசிடிட்டியை உண்டாக்கும். கஃபைன் (caffeine), கார்பனேட்டட் பானங்கள் (carbonated beverages), பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் (fast food), மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தவிர்ப்பது நீண்டகால அடிப்படையில் GERD அறிகுறிகளைத் தடுக்க உதவும்.

டாக்டர் விஷ்ணு அபிஷேக் ராஜு:

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் பத்து ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: இள வயதினரையும் பாதிக்கும் கேட்டராக்ட் பிரச்னை... வராமல் தடுக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:வயதானவர்களுக்கு வந்துகொண்டிருந்த கேட்டராக்ட் பிரச்னை, இப்போதெல்லாம் இள வயதினருக்கும் வருகிறது. கேட்டராக்ட் பிரச்னை ஏன் வருகிறது... அதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா? வந்த பிறகு நிச்சயம... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அதிகரிக்கும் எடை... இனிமேல் வாக்கிங் பலன் தராதா?

Doctor Vikatan:என் வயது 52. நான் இத்தனை வருடங்களாக சரியான எடையில்தான் இருந்தேன். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். இப்போது மெனோபாஸ் வந்துவிட்டதால், எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதே உணவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர், கலையும் தூக்கம்... விடியும்வரை விழிப்பு... தீர்வு உண்டா?

Doctor Vikatan:என்னுடைய வயது 56. நள்ளிரவில் சிறுநீர் கழிக்கச் செல்வது வழக்கமாகி விட்ட நிலையில் மீண்டும் படுக்கைக்கு வந்து படுத்தால் தூங்க முடிவதில்லை. விடியற்காலை வரை விழித்திருக்கிறேன். இதற்குத் தீர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென குறையும் உடல் எடை... ஆரோக்கியத்தின் அறிகுறியா... நோய் பாதிப்பா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து கொண்டே வருவதை உணர்கிறேன். எடைக்குறைப்பு என்பது ஒருவகையில் சந்தோஷமாகத் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இந்தத் திடீர் எடையிழப்பு ஏத... மேலும் பார்க்க

`வாரத்திற்கு ஒருமுறை போதும்!' – நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய இன்சுலின்!

உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் நீண்டகால இன்சுலின் மருந்தான அவிக்லி (Awiqli), சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீரிழிவு மருத்துவர்சத்யன் ராகவன... மேலும் பார்க்க

SIMS: சர்வதேச நோயாளிகளுக்கு புதிய தலைமுறை ‘இடுப்பு எலும்பை பாதுகாக்கும் வெற்றிகர அறுவை சிகிச்சை’

இடுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், சிம்ஸ் மருத்துவமனை ஆசியாவிலேயே முதல் முறையாக புதிய தலைமுறை 'எலும்பை பாதுகாக்கும் இடுப்பு அறுவை சிகிச்சையை' (Bone-Sparing Hip Procedure... மேலும் பார்க்க