செய்திகள் :

Mandaadi: "அந்த வகையில் நான் பார்த்த முதல் பிளாக்பஸ்டர் படம் இதான்"- 'மண்டாடி' குறித்து வெற்றி மாறன்

post image

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Mandadi - மண்டாடி
Mandadi - மண்டாடி

மதிமாறன் புகழேந்தி, இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தற்போது இப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, எனது உதவி இயக்குநர்கள் படம் இயக்கும் காலம் வரை கிட்டத்தட்ட 15 முதல் 20 திரைப்படங்களின் வசூல் நிலவரங்களை மிக நெருக்கமாகக் கவனித்திருக்கிறேன்.

ஆனால், நான் பார்த்த முதல் 'பிளாக்பஸ்டர்' திரைப்படம் இதுதான். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படத்தை நான் முதலில் பார்த்தபோது என்ன உணர்ந்தேனோ, அதே உணர்வுதான் இப்போதும் எனக்குள் இருக்கிறது.

படக்குழுவினரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் வெற்றி மாறன்
இயக்குநர் வெற்றி மாறன்

அவர்கள் இந்தத் திரைப்படத்தோடு தங்களை கனெக்ட் செய்து கொள்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக, இயக்குநர் மதிமாறன், நடிகர் சூரி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இத்தகைய கதைக் களத்தில் இவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

அந்தத் துணிச்சலுக்காகவே இவர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Vikram: 'ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்!' - 2027 ரிலீஸ் - 'சீயான் 63' டைட்டில் அறிவிப்பு!

'இருமுகன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் சங்கருடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் நடிகர் விக்ரம். 'வீர தீர சூரன்' ரிலீஸுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அவருடைய 63-ஆவது படத்தின் அறிவிப்பு சில ... மேலும் பார்க்க

"என்னுடைய கதைகளிலேயே 'டோரதி'தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது" - கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' திரைப்படம் இம்மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி - Dhruv Vikram Updates

துருவ் விக்ரமிற்கு 'பைசன்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட... மேலும் பார்க்க

"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" - மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை

நடிகர் முத்துக்காளை தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்த்துள்ளார். சினிமாவில் நடிகராவதற்கு முன்னர் ஒரு ஃபைட்டாராக தனது கரியரைத் துவக்கியவர் முத்துக்காளை. பின்னர் காமெடி நடிகரா... மேலும் பார்க்க

Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" - அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற 'லீ மேன்ஸ்' கார் பந்தயத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கலந்துகொண்டார். இந்தக் கார் பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலீடுகளை ஈர... மேலும் பார்க்க

Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் ... மேலும் பார்க்க