செய்திகள் :

"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" - மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை

post image

நடிகர் முத்துக்காளை தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்த்துள்ளார். சினிமாவில் நடிகராவதற்கு முன்னர் ஒரு ஃபைட்டாராக தனது கரியரைத் துவக்கியவர் முத்துக்காளை.

பின்னர் காமெடி நடிகராகி விட்டார். இப்போது தன் மகனையும் தன்னுடைய துறையிலேயே சேர்த்துவிட்டது குறித்து முத்துக்காளையிடம் பேசினோம்.

மகனுடன் முத்துக்காளை
மகனுடன் முத்துக்காளை

``பையன் வாசன் முரளி, இப்போ கல்லூரியில் பி.காம். ரெண்டாவது வருஷம் படிக்கறார். கடந்த ரெண்டு வருஷமாக ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் மாஸ்டரிடம் முறைப்படி ஃபைட்ஸ் எல்லாம் கத்துக்கிட்டு வர்றார். ஸ்டண்ட் யூனியன்ல 18 வயசுக்கு மேல இருக்கறவங்களதான் சேர்க்க முடியும். அதான் விதிமுறை.

பையனுக்கு இப்போ 18 வயசுங்கறதால சங்கத்துல உறுப்பினர் கார்டு வாங்கிட்டார். சென்னைக்கு சினிமாவில் ஒரு ஸ்டன்ட் மேன் ஆகனும்னுதான் விரும்பினேன். அப்படித்தான் நானும் யூனியன்ல மெம்பர் ஆனேன். 2000ல இருந்து இப்ப வரை 26 வருஷமா நானும் உறுப்பினரா இருக்கேன். என்னுடைய தாய்வீடுன்னா அது ஸ்டண்ட் யூனியன்தான். புகுந்த வீடுதான் நடிகர் சங்கம்.

மகனுடன்..

நான் நடிக்க முயற்சிக்கும் போது கிடைக்காத வாய்ப்பு, ஸ்டண்ட் யூனியன்ல சேர்ந்த பிறகு தான் எனக்கு 'பொன்மனம்' வாய்ப்பு அமைஞ்சது. என்னுடைய முயற்சிதான் என்னை இந்தளவுக்காவது கொண்டு வந்து விட்டிருக்குது. அதே மாதிரி உன்னுடைய முயற்சி, என்னை தாண்டியும் கொண்டு செல்லலாம். திறமைதான் சினிமாவுக்கான படிப்பு.

நேரமும் வொர்க் அவுட் ஆகணும். நான்தான் கஷ்டப்பட்டு சேர்ந்தேன். அவனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன். வாசன் முரளி பி.காம். படிக்கறார். அதை முடிச்சிட்டு மாஸ்டர் டிகிரி படிக்கணும்னு விரும்பினால் அதையும் படிக்கட்டும். பக்க துணையாக ஒரு வேலை. அதன்பிறகு சினிமாவுக்கு வானு சொல்லியிருக்கேன். நான் ஃபைட்டராகப் போய், நடிகரானேன்.

வாசன் முரளி, முத்துக்காளை
வாசன் முரளி, முத்துக்காளை

இந்தத் துறை தொழில்நுட்ப அளவிலும் பெரிசா வளர்ந்திருக்கு. ஒரு ஃபைட்டர் முறைப்படி கத்துக்க வேண்டியது கட்டாயம். ஆனா, நடிகர்கள் அந்தளவுக்குக் கஷ்டப்பட வேண்டியதில்ல. நடிகர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியது அவசியமில்ல. அந்தளவுக்கு டெக்னிக்கல் நிறைய வந்திடுச்சு. நடிகர்கள் ஸ்டண்ட் விஷயங்களைக் கத்துக்காமல் இருந்தா கூட, அவங்க சூப்பரான ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்கு.

இதெல்லாம் சந்தோஷமா இருக்கு. சினிமா வாய்ப்புகள் யார் மூலமா, எப்படி வரும்னு யாராலேயும் கணிக்க முடியாது. அப்படி கிடைச்சதுனா கண்டிப்பா பயன்படுத்திக்கணும். ஆனாலும் படிப்புதான் மொதல்ல முக்கியம்னு சொல்லியிருக்கேன்!'' என்றார்.

அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி - Dhruv Vikram Updates

துருவ் விக்ரமிற்கு 'பைசன்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட... மேலும் பார்க்க

Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" - அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற 'லீ மேன்ஸ்' கார் பந்தயத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கலந்துகொண்டார். இந்தக் கார் பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலீடுகளை ஈர... மேலும் பார்க்க

Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் ... மேலும் பார்க்க

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க