செய்திகள் :

``அது அவங்க DNA-லயே இருக்கு..." - திமுக குறித்து அமைச்சர் ரமேஷ்

post image

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், தொழில் முதலீடுகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் மற்றும் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ``முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியான மற்றும் கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டு வாய்க்கு வந்ததைப் பேசுபவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கத் தேவையில்லை. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யத் தெரியாதவர்கள் விமர்சனத்துக்காக மட்டுமே எதையாவது பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் இன்று அவர்கள் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வர் விஜய்யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இடங்களில், அவதூறாகப் பேசுவது, ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பது மற்றும் கீழ்த்தரமாக விமர்சிப்பது போன்ற செயல்களைத்தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் உண்மையான அடையாளம். அதை அவர்கள் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்.

அது தி.மு.க-வின் அரசியல் DNA-விலும், வளர்ப்பிலும் ஊறிப்போன ஒன்று. அந்தக் கட்சித் தலைவரின் சொந்த மகனின் பேச்சுகளே அதற்குப் மிகப்பெரிய சான்று. தனது சொந்த மகனையே இத்தகைய அரசியல் பண்பாட்டோடு வளர்த்திருக்கும் ஒருவர், தனது கட்சியை எப்படிப்பட்ட வழியில் வளர்த்திருப்பார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

அறநிலையத்துறை அமைச்சராக இருந்து நிர்வகித்த ஒருவரின் பேச்சிலேயே 'அறம்' இல்லை என்றால், அவர் எந்தத் தகுதியில் அந்தத் துறையை நிர்வகித்தார் என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலமைச்சரையோ, பெண்களையோ அல்லது பொதுமக்களையோ யார் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசினாலும், அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்.

விஜய்
விஜய்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சட்ட ஒழுங்குப் பிரச்னைகளும் அதிகரித்துவிட்டதா? மழை நின்றாலும் தூவானம் விடாது என்ற பழமொழிக்கு ஏற்ப, முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளையும் சீர்கேடுகளையும் தற்போதைய அரசு தீவிரமாகச் சரிசெய்து வருகிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்கவும் முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கையாக 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போன்ற கட்டமைப்பு நடவடிக்கைகளை உருவாக்கியுள்ளார்.

காவல்துறையினருக்குத் தீவிர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட்டு வருகிறது'' என்றார்.

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: ``ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``2005-ம் ஆண்டு கேப்டன் வ... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" - உதயநிதி கேள்வி

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர்... மேலும் பார்க்க

இடைத் தேர்தல்; `இடதுசாரிகள் தனித்துப் போட்டி' - திருமாவளவன் ரியாக்‌ஷன் என்ன?

சிவகாசியில் நேற்று வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது, ``தென்கொரிய நிறுவனத்துடன் கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கப்பல் கட்டும் தளம் அமைக்கு... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: ``விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற" - முதல்வர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட... மேலும் பார்க்க