செய்திகள் :

விநாயகர் சதுர்த்தி: ``விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற" - முதல்வர் விஜய் வாழ்த்து!

post image

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்து அமைப்புகள், விழாக்குழுவினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்ட பந்தல்களில் நிறுவப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு அதிகாலை முதலே கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் கொழுக்கட்டை, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கான வழிமுறைகளும், அதற்கான குறிப்பிட்ட தேதிகளும் மாவட்ட நிர்வாகங்களால் முறைப்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வழிபாட்டிற்குப் பிறகு, வரும் நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட ஊர்வலப் பாதைகள் வழியாகச் சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு கடல் மற்றும் நீர்நிலைகளில் முறைப்படி கரைக்கப்படவுள்ளன. இந்த நிலையில் முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!' என தெரிவித்துள்ளார்.

இடைத் தேர்தல்; `இடதுசாரிகள் தனித்துப் போட்டி' - திருமாவளவன் ரியாக்‌ஷன் என்ன?

சிவகாசியில் நேற்று வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது, ``தென்கொரிய நிறுவனத்துடன் கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கப்பல் கட்டும் தளம் அமைக்கு... மேலும் பார்க்க

"விரட்டி விரட்டி துன்புறுத்தினர்" - மனவேதனையுடன் சிபிஎம் கட்சியிலிருந்து விலகிய சினிமா இயக்குநர்

மலையாளத்தில் 'வசந்தத்தின் கனல் வழிகளில்', தமிழில் வெளிவந்த 'வீரவணக்கம்' மற்றும் 'தீ' உள்ளிட்ட புரட்சிகர அரசியல் திரைப்படங்களை இயக்கியவர் அனில் வி. நாகேந்திரன். இவர் சி.பி.எம் கட்சியில் தீவிரமாக இயங்கி... மேலும் பார்க்க

’தொழில்துறை அமைச்சரை கூட அழைக்காமல் முதலமைச்சர் இங்கிலாந்து சென்றது ஏன்?’ - பெ.சண்முகம் கேள்வி!

கோவை பீளமேடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க