செய்திகள் :

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

post image

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது.

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.

ஆனால், இவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால்தான், இந்த இரு தொகுதிகளும் தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்த இரு தொகுதிகளுக்கும் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தவெக ராஜினாமா செய்தவர்களை அந்தந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகக் களமிறக்குகிறது.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

வீரபாண்டியன் அறிவிப்பு

இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடப் போகின்றன.

இந்த இரு கட்சிகளும் கடந்த சட்டமன்றத் தேர்தலைத் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து சந்தித்தன. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தக் கூட்டணி உடைந்தது.

தனித்துப் போட்டி

தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். ஆனால், அவர்கள் தவெகவின் கூட்டணியில் இணையவில்லை.

இதையடுத்து, தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன இரு கட்சிகளும்.

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க

``எச்.ராஜா, ஆ.ராசா... என்ன வித்தியாசம்?” - பெண்கள் குறித்த பேச்சிற்கு வன்னி அரசு கண்டனம்

திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதைக் கொச்சைப்படுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசியதாக நேற்று திமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. சென்னை சைதாப்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா தாக்குதல்: 'மனிதநேயம் இருந்தால் 'இதை' தடுத்து நிறுத்துவார்களா?' - ஈரான் அதிபர் காட்டம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா தெற்கு ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானிய மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்ப... மேலும் பார்க்க