செய்திகள் :

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் ஜி ஜின்பிங்; மோடி - ஜி ஜின்பிங் என்ன பேசினார்கள்?

post image

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காகப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவர்.

இந்தியா, சீனா மோதல்

2019-ம் ஆண்டு ஜின்பிங் கடைசியாக இந்தியா வந்தார். 2020-ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளுக்கு இடையேயும் மோதல் நடந்தது.

அதன்பிறகு, இரு நாடுகளின் உறவில் விரிசல் விழுந்தது. கடந்த ஆண்டு, ஷாங்காய் மாநாட்டிற்காக இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்றதையடுத்து, கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ஜி ஜின்பிங்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

மோடி பதிவு

நேற்று டெல்லியில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். அது குறித்து இந்தியப் பிரதமர் மோடி, “டெல்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தேன்.

இந்தியா-சீனா இடையிலான அனைத்துத் துறை உறவுகள் குறித்தும் நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம்.

மேலும், அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் சீனாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பிற்கான எங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி ஜின்பிங் பேச்சு

இந்தியா, சீனா உறவு குறித்து ஜி ஜின்பிங், “சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஒருவரின் பலத்திலிருந்து மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, ஒருவருக்கொருவர் வெற்றி பெற உதவி செய்து, ஒன்றாக வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல வேண்டும்.

கொந்தளிப்பான சர்வதேசச் சூழலுக்கு மத்தியில், இரு தரப்பும் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் மனதில் கொள்ள வேண்டும்.

மேலும், உலக அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில், பிரிக்ஸ் அமைப்பின் கூட்டுறவை இணைந்து ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

'ஆல் தி பெஸ்ட் நண்பா!' - ரேஸை தொடங்கி வைத்த விஜய்; சீறிப் பாய்ந்த அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார். AK - Vijayமுதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் விஜய்,... மேலும் பார்க்க

'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' - குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யும் அஜித்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி.லாசரஸ் நடத்தி வருகிறார். குரும்பூர் ரயில் நிலையம் எதிரில் இந்தச் சபை இயங்கி வருகிறது. இந்தச் சபைக... மேலும் பார்க்க

தொடரும் மின்வெட்டு: "'ப்யூஸ் போன' தவெக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்" - உதயநிதி

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ப... மேலும் பார்க்க

BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட... மேலும் பார்க்க

தாராபுரம் இடைத்தேர்தல்: "தவெகவிற்கு வரலாறு காணாத வெற்றி உறுதி" - அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அதிகாரிகள... மேலும் பார்க்க