செய்திகள் :

தாராபுரம் இடைத்தேர்தல்: "தவெகவிற்கு வரலாறு காணாத வெற்றி உறுதி" - அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை

post image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அதிகாரிகளுடன்  ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் அருண்ராஜ், “தற்போது டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. டெங்கு காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. கோவையில் ஒரு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு செவிலியர் கல்லூரி துவங்கப்படும். மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காலியாக உள்ள  7,724 செவிலியர்கள் பணியிடங்களை மாவட்ட நல சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது. நேர்மையான முறையில், வெளிப்படையான முறையில்  பணியமர்த்தப்படுவார்கள். புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.  

புதிய தலைமைச் செயலகம் ஏன் தேவை என முதல்வர் தனது அறக்கையில் சொல்லி இருக்கிறார். அரசியல் காரணங்களுக்காகச் சில பேர் வேண்டாம் சொல்லுவார்கள். இது இந்த ஐந்தாண்டுகளுக்காகக் கிடையாது, அடுத்த தலைமுறைக்காகத்தான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக புதிய தலைமைச் செயலகம் தேவை. மருந்துகள் பற்றாக்குறை எதுவும் இல்லை.

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்

தாராபுரம் இடைத்தேர்தல்ல் எங்களது வியூகம் நான்கு மாத ஆட்சியின் சாதனையினை மக்களிடம் சொன்னாலே போதும். லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை யாரும் நம்பாமல் இருந்தார்கள். ஆனால் லஞ்சம், ஊழலை த.வெ.க ஆட்சியில் கட்டுப்படுத்தி இருக்கிறோம், இது ஒன்றே போதும்.

தமிழக வெற்றிக் கழகம் என்பது அரசியல் கட்சி கிடையாது, இது ஒரு இயக்கம். இது அடுத்த தேர்தலுக்காகக் கிடையாது. அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

தாராபுரம் தொகுதியில் நாங்கள் ஜெயிப்பது உறுதி, இது வரலாறு காணாத அளவிற்கான மிகப்பெரிய வெற்றி இருக்கும். வெற்றி என்பது அரசியல் காரணங்களுக்காக இருக்காது, தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ; சிக்கியது எப்படி?

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: 'ஆசிரியர்களைச் சொந்தப் பணத்தைச் செலவிடக் கட்டாயப்படுத்துவது ஏன்?'- அன்புமணி

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு தேவையான அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

திமுக ஆர்ப்பாட்டம்:``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" - மேயர் பிரியா

சட்டப்பேரவையில் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும், மிசா சட்டம் குறித்து தவறாகவும் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து, தி.மு.க தலைமை உத்தரவின்படி தமிழ்... மேலும் பார்க்க

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

போர்மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு '... மேலும் பார்க்க

"பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை நிதி ஒதுக்கீட்டில் அரசு காட்டுவதில்லை"- அன்பில் மகேஸ்

"ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எ... மேலும் பார்க்க