செய்திகள் :

"பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை நிதி ஒதுக்கீட்டில் அரசு காட்டுவதில்லை"- அன்பில் மகேஸ்

post image

"ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Board-ஐ மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்!

இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஸ்டாலின் மிசா கைது: ``இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ``தற்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியானது வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலு... மேலும் பார்க்க

தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் - சரித் திடீர் திருமணம்!

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு பினராயி விஜயன் ஆட்சி காலத்தில் கேரள அரசியலிலும் தேசிய அளவிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. கடந்த 2020 ஜூலை மாதம், திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: `அரசு மரியாதை வழங்கப்படும்' - அமைச்சர் நிர்மல் குமார்!

மறைந்த புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியும், பிரபல பட்டிமன்ற நடுவருமான ஐயா சாலமன் பாப்பையா மறைவையொட்டி, தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ - புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 ... மேலும் பார்க்க

BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் ... மேலும் பார்க்க