செய்திகள் :

பிரிக்ஸ் கூட்டத்துக்கு டெல்லி வந்த புடின்... கவனம் ஈர்த்த 'Doomsday Plane'!

post image

18-வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பயணத்தில், அவரது சிறப்பு விமானமான 'Doomsday Plane' கவனம் ஈர்த்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் பணிகளுக்காக இந்த விமானம் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புடினின் பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் இந்த விமானம் Ilyushin ll-96-300PU வகையைச் சேர்ந்தது. இதில் உள்ள 'PU' என்ற குறியீடு, Punkt Upravleniya எனப்படும் 'Command Post' என்பதைக் குறிக்கிறது. சாதாரண பயணிகள் விமானமான ll-96-ஐ அடிப்படையாகக் கொண்டு, அதிபரின் பயணம் மற்றும் முக்கிய தகவல் தொடர்புத் தேவைகளுக்காக இந்த விமானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்

இந்த விமானத்தின் முக்கிய சிறப்பு அதன் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளாகும். செயற்கைக்கோள் தொடர்பு, பாதுகாக்கப்பட்ட ரேடியோ மற்றும் தரவுத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விமானத்தில் பறந்தபடியே முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க முடியும்.

சில சர்வதேச ஊடகங்கள் இந்த விமானத்தை 'Flying Kremlin' மற்றும் 'Doomsday Plane' போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன. எனினும், ரஷ்யாவின் பிரத்யேக அணு ஆயுத வான்வழிக் கட்டளை விமானம் என்றால் அது ll-80 ஆகும். ll-96-300PU விமானத்தை 'Doomsday Plane' என அழைப்பது அதன் கட்டளை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகப் பயன்பாடாகும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

புடினின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் இந்தப் பயணம் கவனம் பெற்றுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு ll-96-300PU விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று புடினின் உண்மையான விமானமாகவும் மற்றொன்று போலி விமானமாக (decoy) செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு PS-90A இன்ஜின்களைக் கொண்ட இந்த விமானத்தின் பயணத் திறன் சுமார் 11,000 கிலோமீட்டர் எனக் கூறப்படுகிறது. வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்கள் தெரியாதபோதிலும், அதன் உள்ளே அதிபருக்கான தனிப்பட்ட அறைகள், கூட்டறைகள் மற்றும் சிறப்பு தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் ரசிகர்களே! ₹3 லட்சத்தில் Foldable iPhone முதல் 18 Pro Max வரை! - என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. iPhone Duo என்ற தனது முதல் Foldable iPhone-ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9 அன்று நடந்த ‘Surprise and Shine’ Apple E... மேலும் பார்க்க

AI: `மனித உயிர்களை கொன்றுவிடும்; தெரிந்தே.!' - அந்த்ரோபிக்கில் இருந்து வெளியேறியவர் சொன்ன `ஷாக்'

சிலிக்கான் வேலியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு ராஜினாமா, டெக் உலகை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தையுமே ஒரு நிமிடம் திரு... மேலும் பார்க்க

V2V: `இனி கார்கள் பேசிக்கொள்ளும்' - மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய தொழிற்நுட்பம்! | ஓர் அலசல்

இந்திய விபத்துகளும் உயிர் பலிகளும்!இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தின் எண்ணிக்கையும், அதனால் பறிபோமும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2025-ம் ஆண்டில், இந்தியாவில் நடந்த... மேலும் பார்க்க

TIME100: சென்னை IIT-ல் படித்தவர்... இன்று உலக AI ஆராய்ச்சியின் முக்கிய குரல்! Anima Anandkumar யார்?

சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர், இன்று உலக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிக முக்கியக் குரலாகவும் கவனம் ஈர்க்கும் விஞ்ஞானிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். கால்டெக் பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லையா? இனி கவலை வேண்டாம் - பட்டன் போனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்!

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை ... மேலும் பார்க்க

AI கண்காணிப்பு... லேசர் தாக்குதல்: கொசுக்களை விரட்ட அதிநவீன 'அயர்ன் டோம்'!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தை... மேலும் பார்க்க