செய்திகள் :

சாலமன் பாப்பையா: `அரசு மரியாதை வழங்கப்படும்' - அமைச்சர் நிர்மல் குமார்!

post image

மறைந்த புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியும், பிரபல பட்டிமன்ற நடுவருமான ஐயா சாலமன் பாப்பையா மறைவையொட்டி, தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னோடிகளுடன் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ``சாலமன் பாப்பையா அவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று. கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் பேசுகிறோம். அவர் தனது சொந்த பிள்ளைகளை மட்டுமல்லாது, உலகமெங்கும் வாழும் தமிழ் பிள்ளைகளைத் தனது தமிழால் வளர்த்து எடுத்துள்ளார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

எல்லோரின் இதயத்திலும் இடம் பிடித்த அவருக்கு, அவர் காட்டிய வழியில் நின்று தமிழைக் காப்பதும், கண்ணியத்தோடு பழகுவதுமே நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த இழப்பினால் மிகுந்த மனக்கலக்கம் அடைந்துள்ளார். தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பது தி.மு.க-வின் தொடர் நிலைப்பாடாகும்.

எனவே, சாலமன் பாப்பையா அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும்" என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆளுமைகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த நிலையில், மறைந்த தமிழ் பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ - புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 ... மேலும் பார்க்க

BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் ... மேலும் பார்க்க

புதிய தலைமை செயலகம்: `எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் சிலர் எதிர்ப்பார்கள்'- செங்கோட்டையன்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க