செய்திகள் :

பிரிக்ஸ் மாநாட்டு வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் - திருக்குறளை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி

post image

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய போது அவருக்கு திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசாக நரேந்திர மோடி வழங்கினார். அந்த புத்தகம் தமிழ் மொழியில் இருந்து ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது. 1330 குறள்களை கொண்ட திருக்குறள் உலகம் முழுவதுமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் - அடிக்கடி இந்நூலிலிருந்து மேற்கோள்களைக் குறிப்பிட்டு பேசுவதுண்டு. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரைகளின்போதும், ப. சிதம்பரம் பதவியில் இருந்தபோது ஆற்றிய உரைகளின்போதும் இந்நூலிலிருந்து கருத்துகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.

திருக்குறள் போருக்கான உத்திகள் குறித்த ஞானத்தை இப்புத்தகம் வழங்கினாலும், இது அமைதியின் சிறப்பையும் வலியுறுத்துகிறது. புடினுக்கு இப்புத்தகம் கொடுத்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள பதிவில், "மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து, மகான் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத ஞானத்தை எடுத்துரைக்கும் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புடினிடம் வழங்கினேன்," என்று குறிப்பிட்டுள்ளார். மோடி அடிக்கடி வலியுறுத்தி வரும் 'மோதல்களைத் தவிர்க்க வேண்டும்' என்ற கொள்கைக்கு இது மிகவும் உகந்த புத்தகம் ஆகும்.

இதற்கு முன்பு நரேந்திர நோடி ரஷ்ய அதிரபரை சந்தித்து பேசும்போது, தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் புடினை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகள் வாயிலாக, பிற்காலத்தில் திருக்குறள் ரஷ்ய அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்தது.

ரஷ்யாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய், 19-ஆம் நூற்றாண்டில் வெளியான ஆரம்பகால மொழிபெயர்ப்பு ஒன்றின் வாயிலாகத் திருக்குறளை அறிந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அறம், கருணை மற்றும் அகிம்சை ஆகியவற்றுக்கு அது அளிக்கும் முக்கியத்துவம் அவரது தத்துவார்த்த எழுத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தனது 2019 சுதந்திர தின உரையின் போது, ​​ஜல் ஜீவன் இயக்கத்தை அறிவிக்கும் போது, ​​திருவள்ளுவரின் “நீர் இன்றி அமையாது உலகம்”, என்பதை மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது .

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்கா... மேலும் பார்க்க

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்... Some more jobs gone' - தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்!

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது... மேலும் பார்க்க

வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் - சாடும் பாஜக

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் முதல்வர் ஓமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதி... மேலும் பார்க்க

மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" - பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண... மேலும் பார்க்க