செய்திகள் :

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

post image

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த கூட்டமைப்பு 'இந்தியாவின் அணு ஆயுதங்கள் - 2026' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், அணுசக்தி தகவல் திட்டத்தின் இயக்குனர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் தெரிவித்துள்ள தகவலில் "அணுசக்தி திறன் தொடர்பான பொதுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியா சுமார் 190 அணு ஆயுதங்களைத் தயாரித்திருக்கலாம் என்று மதிப்பிடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவை உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. இருப்பினும் அதன் ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை விட மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் கையிருப்பு விரைவில் பிரிட்டனின் மதிப்பிடப்பட்ட 225 அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை முறியடிக்கக்கூடும். ஏனெனில் புது டெல்லி தொடர்ந்து புதிய அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

அரசாங்க தரவுகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் வணிக ரீதியிலான செயற்கைகோள் புகைப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தே இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா ரகசியமாக வைத்திருக்கும் திட்டங்களை, வெளியில் கிடைக்கும் பொதுவான ஆதாரங்களை வைத்தே நிபுணர்கள் கண்டறிகின்றனர். இந்தியா 140 முதல் 225 அணு ஆயுதங்களுக்கு போதுமான புளூட்டோனியத்தை தயாரித்திருக்கலாம் என்றும், அதன் மூலம் 190 அணுகுண்டுகள் வரை தயாரித்து இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

நடப்பு ஆண்டின் முற்பகுதியில், இந்தியா சுமார் 730 கிலோ ஆயுதம் தரக்கூடிய புளூட்டோனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக சர்வதேச குழு மதிப்பிட்டுள்ளது. ஒரு அணுகுண்டுக்கு தோராயமாக 4 கிலோ புளூட்டோனியம் தேவையாகும். அதன் அடிப்படையில் பார்த்தால் 140 முதல் 225 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு அறிக்கையின்படி, புதிய ஏவுகணைகளுக்கான குறைந்தபட்சம் 30 அணு ஆயுதங்கள் அதிகரித்துள்ளன. எனவே ஏற்கனவே இருக்கும் 160 அணு ஆயுதங்களுடன் தற்போது இருப்பதையும் சேர்த்து மொத்தம் 190 ஆக உள்ளது. இந்தியாவிடம் இரண்டு விமானம் தாங்கிய கப்பல்கள், ஆறு தரை அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஒரு கடல் சார்ந்த ஏவுகணை இருக்கிறது.

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்... Some more jobs gone' - தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்!

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது... மேலும் பார்க்க

வந்தே மாதரம்: முடியும் வரை எழுந்து நின்ற ஒமர் அப்துல்லா; அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் - சாடும் பாஜக

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் முதல்வர் ஓமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதி... மேலும் பார்க்க

மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" - பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண... மேலும் பார்க்க

தாராபுரம்: புழுதிப்புயலுக்குள் சீறிப்பாய்ந்த கார்கள் - களைகட்டிய கார் பந்தயம் | Photo Album

திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கா... மேலும் பார்க்க