செய்திகள் :

"அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என ஆதவ் பிரசாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால்..!' - திருமா சொல்வதென்ன?

post image

விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்.

" தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக் கூட்டணியில் இருந்து சிலர் விசிகவை அகற்றப் பார்த்தனர்.

இதனை நான் எல்லோரிடமும் பகிரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணனிடம் அவ்வப்போது சந்தித்த நெருக்கடிகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்தக் கூட்டணியை உடைப்பதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாகவும் வெளிப்படையாகவும் அவரிடம் கூறினேன்.

ஸ்டாலின் - திருமாவளவன்
ஸ்டாலின் - திருமாவளவன்

என்னை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கு விசிகவை டார்கெட் செய்து பிரசாரம் செய்தார்கள்.

ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி உடையக் கூடாது என்று விசிக உறுதியாக இருந்தது. இதெல்லாம் இன்று நம்மை விமர்சிக்கின்ற கும்பலுக்கு தெரியாது. நம்மோடு இருந்த ஆதவ் அர்ஜுனா அவர்கள் எப்படியெல்லாம் விசிகவை வளர்த்தெடுக்கப்போகிறோம் என்று நம் செயற்குழு கூட்டத்தில் பேசியிருந்தது நம் தோழர்களுக்கு தெரியும்.

அப்போது அவருடைய கோரிக்கை என்னவாக இருந்தது என்றால் அடுத்த முதலமைச்சர் திருமாவளவன் தான் என்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதீதமானது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்ல பிற ஜனநாயக சக்திகளும் உங்களை நம்புகிறார்கள். எனவே நீங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்து முதலமைச்சர் நீங்கள் தான் என்ற வேலைப்பாடுகளை மேற்கொள்வோம் என்று எங்கள் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படையாக அவர் பேசினார்.

திருமாவளவன்
திருமாவளவன்

நான் சொன்னேன் முதலமைச்சராவது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக தலைமையிலானக் கட்டுக்கோப்பான கூட்டணியை இந்தக் காரணத்திற்காக உடைத்துவிட்டோம் என்ற பெயர் வந்துவிடக்கூடாது. அதனால் இதற்கு உடன்பட மாட்டேன் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் கூறினேன்" என்று பேசியிருக்கிறார்.

"திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடி இருப்பார்கள்" - திருமா

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். "திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச் சின்னத்தில... மேலும் பார்க்க

``மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு..." - சீமான் ஆவேசம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

BRICS மாநாடு: புதின், ஜி ஜின்பிங், மசூத் பெசெஷ்கியானை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மோடி!

இந்தியா டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (செப்டம்பர் 12, 13) நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமை மாறும். அப்படி இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை இந... மேலும் பார்க்க

"புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை; ஆனால்..." - எடப்பாடி பழனிசாமி

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் ... மேலும் பார்க்க

"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்..." - ட்ரம்ப்

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் மூடிதான் இருக்கிறது. குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அவ்வப்போது அனுமதி கிடைத்து வருகிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் அமெரிக்கா, ... மேலும் பார்க்க

"துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அம... மேலும் பார்க்க