தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் - அசத்தும் சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!
Varun Tej: "நீ வந்த பின்தான்... அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் - லாவண்யா தம்பதி
நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.

தங்களது மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டுச் குழந்தையுடனான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இவர்களின் மகனுக்கு 'வாயுவ்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
மகனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த வருண் தேஜ், "என் அன்பு மகனே, நீ என் உலகத்தையே மிகச்சிறந்த வழியில் மாற்றிவிட்டாய். உன்னை பார்ப்பதற்கு முன்பிருந்து உன் மீது அவ்வளவு பிரியம் வைத்திருக்கிறேன்.
உனக்கு தந்தையாக இருப்பதுதான் என் வாழ்க்கையின் மிகவும் அழகான தருணம். முதலாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள், வாயுவ். நான் உன்னை எப்போதும் நேசிக்கிறேன்!" எனப் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை லாவண்யா திரிபாதி, "என் அன்பே, உனக்கு அம்மாவாக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நீ எங்கள் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு, அன்பு என்றால் என்னவென்று எனக்குத் தெரியும் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் நீ வந்த பிறகுதான், ஒரு புதிய வகையான அன்பையே நான் கண்டிருக்கிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.
















