செய்திகள் :

Nepal Flood: "பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது" - நடிகை ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உருக்கம்

post image

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின.

பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்டோர் நிலவரம் என்னவென்று தெரியாமல் காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ஆழ்ந்த கவலையையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ராஷ்மிகாமந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா

இது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ``நேபாளத்தில் இருந்து வரும் காட்சிகளைப் பார்ப்பது மிகவும் பயமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது. அங்கிருக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும், சூழ்நிலை விரைவில் சீரடைய வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன்.. தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.." என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், ``"இயற்கை கொஞ்சம் கருணை காட்டும் என்று நம்புகிறேன்; பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!"- ஸ்ரீ கௌரி ப்ரியா

'லவ்வர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கௌரி ப்ரியா. சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் 'சென்னை லவ் ஸ்டோரி' படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கௌரி ப்ரியா 'Hi... மேலும் பார்க்க

Irumudi: "என் சினிமா போராட்டங்கள் 90-களில் சென்னைலதான் தொடங்கியது!" - சென்னையில் ரவி தேஜா

ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தினை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். Irumudi -... மேலும் பார்க்க

Nagarjuna: ''மணிரத்னம் படத்தில் நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவு" - சொல்கிறார் நாகர்ஜூனா

நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தது தனது திரையுலகப் பயணத்திலேயே மிகவும் துணிச்சலான முடிவு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தனது மகன்களான நாக சைத... மேலும் பார்க்க

"என் தம்பி எனக்கு போன் செய்வதே இல்லை.!"- பிரம்மானந்தம் குறித்து உருக்கமாகப் பேசிய சகோதரர்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீ வதன் தனக்கும், தனது சகோதரருக்கும் (பிரம்மானந்தம்) இடையேயான உறவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்... மேலும் பார்க்க

"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவரகொண்டா

'தொரசானி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆனந்த் தேவகொண்டா. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் இவர். Anand Devarakondaஅவர் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி... மேலும் பார்க்க

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில்... மேலும் பார்க்க