செய்திகள் :

Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?

post image

Doctor Vikatan: நான் சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின், மான்டெக்-எல்சி உள்ளிட்டவை) எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

அதனுடன் மலச்சிக்கலுக்கான ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போய் விட்டது. அது பற்றிய விவரங்களைக் கேட்டபோது ஆங்கில மருந்துகள் மற்றும் சில ஆயுர்வேத மூலிகைகளின் சேர்க்கையில் ஏற்பட்ட எதிர்வினை காரணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள்.

இந்த நிலையில் நான் மலச்சிக்கல் பிரச்னைக்காக திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ளலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும்.

-மலைசாமி, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

திரிபலா சூரணம் என்பது மலச்சிக்கலைப் போக்கக்கூடிய ஒரு மருந்துதான். சிஓபிடி (COPD) எனப்படும் சுவாசப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவரும் அதே வேளையில், நீங்கள் தாராளமாக திரிபலா சூரணத்தை எடுத்துக் கொள்ளலாம். 

அதிக வீரியமுள்ள அலோபதி மருந்துகளை எடுக்கும்போது மட்டுமே மருந்துகளுக்கிடையேயான பக்க விளைவுகள் (Drug Interaction) ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நீங்கள்  தற்போது எடுத்துவரும் சாதாரண மருந்துகளோடு திரிபலா சூரணத்தை எடுப்பது பாதுகாப்பானதுதான். 

தற்போது அலோபதி சிகிச்சை பெற்று வந்தாலும், அதனுடன் ஒருங்கிணைந்த முறையில் சித்த மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. சித்த மருந்துகளையும் சேர்த்து எடுக்கும்போது நோயின் அறிகுறிகளில் இருந்து சீக்கிரமாக நிவாரணம் பெற வாய்ப்புள்ளது.

திரிபலா சூரணம்

மற்றபடி, திரிபலா சூரணம் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள மூலிகை மருந்துகளை உட்கொள்வதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், எந்த மாதிரியான மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலோடு தெளிவுபடுத்திக் கொண்டு உட்கொண்டால் எவ்விதச் சிக்கலும் இருக்காது.

அடுத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள், வாட்ஸ்அப் ஃபார்வேர்டில் வந்தது என்பதையெல்லாம் நம்பி, எந்த மருந்தையும் சுயமாக எடுப்பது எப்போதும் யாருக்கும் ஆபத்தானதுதான். மலச்சிக்கலுக்கான மருந்து எடுப்பதைவிடவும், முக்கியமானது அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வது. எனவே, முதலில் அதை கவனியுங்கள்.

டாக்டர் விக்ரம்குமார்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமானால் முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலைத் தொடரலாமா?

Doctor Vikatan:ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போதுகர்ப்பமான நிலையில்,தனதுமுதல் குழந்தைக்கு(ஒன்றரை வயது) தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா... அவருக்கு தாய்ப்பால் சுரப்பும் இருக்கிறது. அவர் தாய்ப்பால் கொட... மேலும் பார்க்க

'உங்கள் பாதம் ஆரோக்கியமாக இருக்கிறதா?' - கவனிக்க ஒரு கருத்தரங்கம் | பாதமே நலமா சீசன் 3

உங்கள் உடலின் ஒரு பகுதி உங்களுக்குத் தெரியாமலே கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா?ஆனால், இதுதான் கசப்பான உண்மை! சர்க்கரை நோய் (Diabetes) உள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வருடக்கணக்கில் சிகரெட் பழக்கம், பலமுறை தோல்வி... உறுதியாக கைவிட10 ஆலோசனைகள்!

Doctor Vikatan: நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கிறேன். அதை நிறுத்த பல முறை முயன்றும் என்னால் முடியவில்லை. சிகரெட் பழக்கத்தை அறவே நிறுத்த என்னதான் செய்வது?-dmurthy,விக... மேலும் பார்க்க

Doctor Vikatan: கையை உயர்த்தவே முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி... அறுவை சிகிச்சைதான் தீர்வா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறான். மருத்துவர்களைப் பார்த்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில... மேலும் பார்க்க

Doctor Vikatan: பஞ்சங்களால் மாறிய மரபணுக்கள்; ஆரோக்கியமான இளைஞர்களுக்கும் மாரடைப்பு - இதுவா காரணம்?

Doctor Vikatan: கடந்த காலங்களில் இள வயது மாரடைப்புகளும் மரணங்களும் அதிகரித்து வருவதைக் கேள்விப்படுகிறோம்.இவற்றுக்கெல்லாம் நம் மூதாதையர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்... மேலும் பார்க்க