செய்திகள் :

Bigg Boss Tamil 10: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் கிரிக்கெட் வீரர்?

post image

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சி தொடங்கி பத்தாவது ஆண்டு என்பதால் இந்த வருடம் புதிய முயற்சியாக தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வரும் ரசிகர்களில் சிலரை நிகழ்ச்சிக்குள் அனுப்பும் விதமாக பிக்பாஸ் தி காமன் மேன் என்ற நிகழ்ச்சி ஒன்றும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து மூன்று பேர் பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்களென கூறப்படுகிறது.

இந்த வருடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் என பலரது பெயர்கள் சமூக வலைதளங்களில் அடிபட்டு வருகின்றன.

விகடன் தளத்திலும் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள் என சிலரது பெயர்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆல்யா மானசா |Alya Manasa

ஹிட் சீரியல் ஹீரோயின்!

சீரியல் நடிகை ஆல்யா மானசா பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராகச் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா அந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஐலா, அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஆல்யா பெயர் மட்டுமே அடிபடுகிறது. அவரது கணவர் பெயர் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள்.

‘முரளி விஜய்

முதல்முறையாக விளையாட்டு வீரர்!

பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக கிரிக்கெட் வீரர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப் படுகிறது. அவர் முரளி விஜய். தமிழ்நாடு அணிக்காகவும் ஐ.பி.எல் லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடியிருக்கிறார் இவர்.

TV Update: மீண்டும் குஷ்பு நடத்தும் ஜாக்பாட்; டாக் ஷோ மூலம் என்ட்ரி தரும் சேரன்!

ஜெயா டிவி-க்கு வயசு 28!28வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஜெயா டிவி. அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவிதான் ஆரம்ப காலத்தில் திமுகவின் அதிகாரபூர்வ சேனல் போல செயல்பட்டு வந்தது.இதன் ரீச் அதிகமாக இ... மேலும் பார்க்க

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள..." - டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து!

விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற வி... மேலும் பார்க்க

Bigg Boss 10: முன்னாள் போட்டியாளரின் பாய் ஃப்ரண்ட், நடிகையின் மகள்.! - கலந்து கொள்கிறவர்கள் இவர்களா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் ந... மேலும் பார்க்க

"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா

சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில்... மேலும் பார்க்க

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு த... மேலும் பார்க்க

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' - எதற்காகத் தெரியுமா?

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே 'பிக்பாஸ் தி காமன் மேன்' அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்... மேலும் பார்க்க