செய்திகள் :

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

post image

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

Mohanlal - Suchithra
Mohanlal - Suchithra

அந்தப் பேட்டியில் சுசித்ரா பேசுகையில், "ஒரு திருமண நிகழ்வில்தான் நான் மோகன்லாலை முதன்முதலாகப் பார்த்தேன்.

எங்கள் இரண்டு குடும்பத்தினரும் ஏற்கெனவே மிகவும் நெருக்கமானவர்கள். ஒரு ரசிகையாக அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அந்தப் புகைப்படம் எனக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை.

நான் மோகன்லாலைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னபோது குடும்பத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், என் தந்தை என்னிடம் சில விஷயங்களைத் தெளிவாகச் சொன்னார்.

'அவர் சினிமா துறையில் இருப்பவர். படப்பிடிப்பு காரணமாகப் பல நாள்கள் வீட்டை விட்டு வெளியிலேயே இருக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும்.

Mohanlal - Suchithra
Mohanlal - Suchithra

ஒரு நடிகரைத் திருமணம் செய்துகொண்டு, நாளைக்கு அதனால் வரக்கூடிய பிரச்னைகளைச் சொல்லி என் முன்னால் வந்து அழுதால், நான் உன்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

என் தந்தை மோகன்லாலிடம், 'என் மகளை நன்றாகப் பார்த்துக்கொண்டு அவளைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டீர்கள்' என்று சொன்னார்.

அதற்கு மோகன்லால், 'நீங்கள் அவளை எவ்வளவு அன்பாகப் பார்த்துக்கொண்டீர்களோ, அதைவிட அதிகமாக என்னால் பார்த்துக்கொள்ள முடியாது அல்லவா?' என்று மிகவும் பணிவாகப் பதில் சொன்னார்" எனப் பேசியிருக்கிறார்.

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நிவின் ப... மேலும் பார்க்க

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந... மேலும் பார்க்க

Drishyam 4: ``திரிஷ்யம் அடுத்த பாடம் வரும்" - தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி!

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெ... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதர... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit: " 'பிரேமலு 2' முடிந்து போன கதை!" - 'பிரேமலு' இயக்குநர் கிரிஷ் ஓபன் டாக்

'பிரேமலு' படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்திருக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் நாளை திரைக்கு வருகிறது.Premalu'பிரேமலு' கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்த... மேலும் பார்க்க