செய்திகள் :

Drishyam 4: ``திரிஷ்யம் அடுத்த பாடம் வரும்" - தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி!

post image

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனையுடன் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், மோகன்லால் 'ஜார்ஜ்குட்டி' கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

Jeethu Joseph
ஜீத்து ஜோசப்

இதற்கிடையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' இதழுக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியளித்திருந்தார். அதில், `` ஒவ்வொரு பாகம் முடியும்போதும், அடுத்த பாகத்திற்கான கதையை யோசிக்குமாறு தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவதையும், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது மூன்றாவது பாகத்தையும் யோசிக்கச் சொன்னார்கள்.

இப்போது நான்காம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்குமாறு கூறுகிறார்கள். இருப்பினும், 'திரிஷ்யம் 3' வசூல் சாதனை படைத்ததற்காக அவசர அவசரமாக அடுத்த பாகத்தை எடுக்க விருப்பமில்லை. கதாபாத்திரங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பற்றி யோசித்து நிதானமாகவே கதையை உருவாக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மனோரமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆண்டனி பெரும்பாவூர், ``திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும். இதை நான் மனதார, முழு நம்பிக்கையோடு கூறுகிறேன்" என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதர... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit: " 'பிரேமலு 2' முடிந்து போன கதை!" - 'பிரேமலு' இயக்குநர் கிரிஷ் ஓபன் டாக்

'பிரேமலு' படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்திருக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் நாளை திரைக்கு வருகிறது.Premalu'பிரேமலு' கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்த... மேலும் பார்க்க

Mohanlal: 'ஆர்வம் தரும் கதைகள்'; ஒரே நேரத்தில் 7 இயக்குநர்களின் படம்; மோகன்லால் தந்த சர்ப்ரைஸ்!

நடிகர் மோகன்லால், தன்னுடைய அடுத்த 7 புதிய திரைப்படங்களை மொத்தமாக அறிவித்து ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், 'ஆர்வம் தரும... மேலும் பார்க்க

Mohanlal: சபரிமலையில் மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நடந்த அனுமதி மறுப்பு - பின்னணி என்ன?

மோகன்லால் மற்றும் இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் 'தொடரும்' திரைப்படம் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி மீண்டும் இணைந்தது. அந்தப் படத்திற்கு... மேலும் பார்க்க

"மனசோர்வுடன் இருக்கும்போதெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும்!" - நெகிழும் அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் ஊடகவியலாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், காதலித... மேலும் பார்க்க

"நான், மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவிருந்த படம் கைவிட வேண்டிய சூழல்.!" - பிருத்விராஜ் ஓப்பன் டாக்

பிருத்விராஜ் நடித்துள்ள 'கலீஃபா' திரைப்படம் ஓணம் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணியில் பிருத்விராஜ் ஈடுபட்டு வருகிறார். Khalifa Posterநேற்றைய தினம் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்வில் பிரு... மேலும் பார்க்க