செய்திகள் :

"மனசோர்வுடன் இருக்கும்போதெல்லாம் அவரிடமிருந்து மெசேஜ் வரும்!" - நெகிழும் அனுபமா பரமேஸ்வரன்

post image

'பிரேமம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன்.

சமீபத்தில் ஊடகவியலாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், காதலித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் மனம் திறந்து பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி இருந்தன.

அனுபமா பரமேஸ்வரன் - துல்கர் சல்மான்
அனுபமா பரமேஸ்வரன் - துல்கர் சல்மான்

இந்நிலையில் அதேபேட்டியில் நீங்கள் கஷ்டமான காலகட்டங்களைச் சந்திக்கும்போது திரைத்துறையில் இருக்கும் எந்த நபரின் ஆதரவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "இந்தக் கேள்வியைக் கேட்கும்போது என் நினைவுக்கு வரும் முதல் பெயர் துல்கருடையதுதான். நான் எப்போதெல்லாம் மனசோர்வுடன் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் துல்கர் எனக்கு மெசேஜ் அனுப்புவார். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

துல்கரிடம் சிறிது நேரம் பேசிய பிறகு, நான் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவேன்.

துல்கரைப் போலவே நான் நம்பக்கூடிய இன்னொரு நபர் ராம். நான் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ராம் போத்தினேனியைச் சொல்கிறேன்.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

கடந்த சில நாட்களாகவே பலர் என்னைக் கூப்பிட்டு, நான் நலமாக இருக்கிறேனா என்று விசாரித்து வருகிறார்கள். அதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் மற்றவர்களை விட நான் எப்போதும் அதிகம் நம்பக்கூடிய ஒரு நபர் துல்கர்தான்" என்று கூறியிருக்கிறார்.

"நான், மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவிருந்த படம் கைவிட வேண்டிய சூழல்.!" - பிருத்விராஜ் ஓப்பன் டாக்

பிருத்விராஜ் நடித்துள்ள 'கலீஃபா' திரைப்படம் ஓணம் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணியில் பிருத்விராஜ் ஈடுபட்டு வருகிறார். Khalifa Posterநேற்றைய தினம் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்வில் பிரு... மேலும் பார்க்க

"நீங்க மம்மூட்டி சாரா? என்னை ஃபாலோ செய்ங்க!" - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழக ரசிகர்!

தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழகத்தைச் சேர்ந்த பாண... மேலும் பார்க்க

"இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு அவரின் காதல் மு... மேலும் பார்க்க

Mohanlal: "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?" - மகளின் சினிமா அறிமுகம் பற்றி மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

Keralam: ஸ்வேதா மேனன் வழங்கும் 'ஓண கிட்' வாங்க மறுக்கும் நடிகைகள்; 'அம்மா' அமைப்பில் தொடரும் விவாதம்

படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மலையாள த... மேலும் பார்க்க

" 'ஜெய் பீம்' படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது, ஆனால்.!"- லிஜோமோல் ஷேரிங்

தமிழில் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் 'செங்கேணி' கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த லிஜோ மோல் நடிப்பில் 'உன்மதம்' என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது.இந்தப் படம் தொடர்பாக 'Cinema Expres... மேலும் பார்க்க