செய்திகள் :

வணக்கம் சென்னை கண்காட்சி: பழைய மெட்ராஸின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிய அரிய கண்காட்சி!

post image

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற ‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் RMRL கண்காட்சி’ நிறைவு பெற்றது.

மெட்ராஸ் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் (RMRL) ‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் RMRL கண்காட்சி’ நடைபெற்றது.

ஆகஸ்ட் 17 முதல் 22 வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சி, சென்னை நகரின் பல்வேறு காலகட்டங்களையும் அதன் மாற்றங்களையும் அச்சுப் பதிவுகள் வழியாக அறிந்துகொள்ள பார்வையாளர்களுக்கு வாய்ப்பளித்தது.

‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் கண்காட்சி
‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் கண்காட்சி

சென்னையின் கட்டிடக்கலை, கலாசாரம், அரசியல், சமூக மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைப் பதிவு செய்த வெளியீடுகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

நகரம் எவ்வாறு வளர்ந்தது, அதன் அடையாளங்கள் எவ்வாறு மாறின என்பதைக் கடந்த காலப் பதிவுகளின் வழியே தெரிந்துகொள்ள முடிந்ததால், வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரும் கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சென்னை நகரம் சார்ந்த பதிவுகளை ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த கால சென்னையை அன்றைய எழுத்து மற்றும் அச்சுப் பதிவுகளின் வழியாகப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இந்தக் கண்காட்சி அமைந்தது.

வடசென்னை - வரலாறும் வாழ்வியலும்
வடசென்னை - வரலாறும் வாழ்வியலும்

கண்காட்சியில் கவனம் ஈர்த்த சில புத்தகங்கள் 

 *வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்* 

எழுத்தாளர், சமூக ஆய்வாளர் மற்றும் வரலாற்றாளர் நிவேதிதா லூயிஸ் எழுதிய "வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்" என்ற நூல், சென்னையின் ஆதிப் பகுதியான வடசென்னையின் உண்மையான முகத்தையும் அதன் உழைக்கும் மக்களின் வாழ்வையும் விரிவாகப் பேசும் ஒரு சிறந்த வரலாற்றுப் பதிவு நூலாகும்.

சினிமாக்களிலும் பொதுப்புத்தியிலும் வடசென்னை என்றாலே சண்டை, வன்முறை, குற்றம் நிறைந்த பகுதி என்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள தவறான பிம்பத்தை இந்நூல் உடைக்கிறது.

வடசென்னையின் உண்மையான இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் கடின உழைப்பு, கலாசாரம், கலைகள் மற்றும் அவர்களின் வாழ்வியலை நேர்மையுடன் விவரிக்கிறது.

*கறுப்பர் நகரம்* 

எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘கறுப்பர் நகரம்’ நாவல், தமிழிலக்கியத்தில் வடசென்னை மற்றும் கூவம் நதிக்கரை மக்களின் வாழ்வியலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்த ஒரு முக்கியமான படைப்பாகும்.

கறுப்பர் நகரம்
கறுப்பர் நகரம்

 *கட்டடம் சொல்லும் கதை* 

ஆர். வெங்கடேஷ் எழுதிய ‘கட்டடம் சொல்லும் கதை’, இந்த புத்தகம் சென்னைப் பெருநகரின் வண்ணமயமான வரலாற்றை அங்குள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வாயிலாக மிக அழகாக விவரிக்கிறது. சென்னை (மெட்ராஸ்) நகரின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றுப் பரிணாமத்தை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி புத்தகமாக அமைந்தது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தை வெறும் நிகழ்வாக மட்டுமின்றி, நகரின் கடந்த காலத்தை மீண்டும் நினைவுகூரும் அனுபவமாக மாற்றியது.

பழைய பதிவுகளைத் தேடி அறியவும், சென்னையின் வரலாற்றை புதிய பார்வையில் புரிந்துகொள்ளவும் பார்வையாளர்களிடம் உருவான ஆர்வமே கண்காட்சியின் முக்கியமான கவனம்  ஈர்த்த நிகழ்வாக அமைந்தது...

Velpari Drama: '40 பெண் கலைஞர்கள், ஒரு மாத பயிற்சி, 3 மணிநேர நீளம்'- நாடகவடிவில் மேடை ஏறிய வேள்பாரி!

இது வரையில் எழுத்து வடிவத்தில் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர்களுக்கு விருந்தளித்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் கலை வடிவில் நாடகமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கேறியது. வீனிக்ஸ் கலைக்குழு மற... மேலும் பார்க்க

VIT: "படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளைப் பாருங்கள்"- ஞானபீடம் வைரமுத்துவுக்கு `ஞானம்பாடி' விருது

ஞானபீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதினை கடந்த ஜூலை 13 ஆம் தேதி வைரமுத்து பெற்றிருந்தார். அதற்காக இன்று வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம் சார்பில் ... மேலும் பார்க்க

தாளத்தில் தடம் பதிக்கும் ஜமாப் இசைக் குழு; கவனம் ஈர்க்கும் மருதமலை இளைஞர்கள்!

மருதமலைக்கு மேலே வசிக்கும் பழங்குடியின இளைஞர்கள் சுமார் 20 பேர் இணைந்து 2013-ஆம் ஆண்டு ஜமாப் இசைக் குழுவைத் தொடங்கினர். தங்களுக்குப் பிடித்த இந்த இசையில் திறமை இருப்பதை உணர்ந்த இளைஞர்கள், தனித்தனியாக ... மேலும் பார்க்க

`வெப்பத்தின் வெறியாட்டம்' - சமூக மாற்றத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் வித்திட்ட கட்டைக்கூத்து

அசார் சோஷியல் இம்பாக்ட் அட்வைசர்ஸ் நிறுவனமும், எம்.எஸ் . சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய வெப்பத்தின் வெறியாட்டம் கட்டைக்கூத்து நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடைபெற்றது.அசார் சோஷியல் இம... மேலும் பார்க்க

`GI டேக் கிடைச்சிருக்கு; ஆனா இந்தக் கலையைக் காப்பாத்த ஆள்தான் இல்லை!'- சொப்புச் சாமான் கலைஞர் சரவணன்

"குழந்தை பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களோட கைவினைப் பொருள்கள் பயணிக்குது" என்று பெருமையுடன் கூறுகிறார், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சரவணன். ... மேலும் பார்க்க