செய்திகள் :

Canada Vs US: ``தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" - கனடப் பிரதமர் காட்டம்

post image

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50% புதிய வரியை அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்கா-கனடா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இறுதியில் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்விக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி செய்தியாளர்களிடம், ``அமெரிக்கா, கனடாவிற்கு விதித்த வரிகளுக்கு இணையாக டாலருக்கு டாலர் என்ற அடிப்படையில் புதிய வரிகள் விதிக்கப்படும். எஃகு, எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள் மற்றும் காகிதப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த வரி விதிப்பில் அடங்கும்.

கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு கனடாவும் இணையான வரிகளை விதிக்கும்.

அமெரிக்காவுடன் கனடா வர்த்தகப் போரில் ஈடுபடுகிறதா என்றால், தாக்கப்படும் போதுதான் போர் உருவாகிறது. நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம். கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளே பேச்சுவார்த்தை முறியக் காரணம்.

மேலும், பிற நாடுகளுடன் கனடா புதிய வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

கனடாவின் இறையாண்மை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் எந்த நிபந்தனைக்கும் பணியப்போவதில்லை. அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் கனடிய தொழில்துறை மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க அடுத்த வாரம் புதிய உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும், இந்த ஆதரவு பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும்" எனத் தெரிவித்தார்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

கனடாவின் ஏற்றுமதியில் 70% அமெரிக்காவையே சார்ந்துள்ள நிலையில், வர்த்தக அமைப்புகளும் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே உள்ளிட்ட தலைவர்களும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், ``அமெரிக்காவுடன் இணைந்து செயல்படக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை கனடா நழுவவிட்டுவிட்டது. கனடாவின் இந்தப் பதிலடி நடவடிக்கைக்கு ஏற்ப நாங்கள் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம்" எனத் தெரிவித்திருக்கிறார்

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" - கீர்த்தனா ஆதங்கம்

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக... மேலும் பார்க்க

TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து வசதியின்றி சிரமப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காகப் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமை... மேலும் பார்க்க

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சட்டமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தேவையற்ற மற்றும் அவைக்குறிப்பிற்கு மாறான வார்த்... மேலும் பார்க்க

"ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" - கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா

சிவகாசியில் தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட். 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கீர்த்தனா, "100 நாள் ஆட்சியில் வரலாற்றில் யாரும் செய்யாத வகையில் ஊழலற்ற ஆட்சியை... மேலும் பார்க்க

"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?" - திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில்

முழுமையாக 100 நாட்களைக் கடந்துவிட்ட த.வெ.க ஆட்சியில், தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான விவாதங்களில் அனல் பறக்கின்றன. 'லஞ்சம், ஊழல் அற்ற ஆட்சியைக் கொடுப்பேன்' எனச் சூளுரைக்கிற... மேலும் பார்க்க

"எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" - மாணிக்கம் தாகூர் கேள்வி

கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, “தற்போது 23 கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் தொடர்கின்றன.தவெகவுக்கு எப்போது ... மேலும் பார்க்க