செய்திகள் :

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

post image

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

Bethlehem Kudumba Unit
Bethlehem Kudumba Unit

வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், தி ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி பகிர்ந்திருக்கிறார் 'பிரேமலு' இயக்குநர் கிரீஷ் ஏ.டி. அவர், "ஒரு படம் என்பது ஒரு மனிதனின் கைரேகை போன்றது. ஒரு இயக்குநரின் பாணியை இன்னொருத்தரால் அப்படியே ரீமேக்கோ அல்லது ரீகிரியேட்டோ செய்யவே முடியாது.

என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், வேணு நாகவள்ளி போன்ற ஒரு இயக்குநர் இயக்கிய படத்தைப் பார்த்த ஒரு நிமிடத்திலேயே என்னால் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். அது எப்படி என்னால் முடிகிறது என்பதை விவரிக்கத் தெரியாவிட்டாலும், அதை என்னால் உணர முடியும்.

Premalu 2 - Girish AD
Premalu 2 - Girish AD

ஒரு நல்ல இயக்குநராக இருந்தாலும் சரி, சுமாரான இயக்குநராக இருந்தாலும் சரி, அவர்கள் இருவருக்குமே கண்டிப்பாக ஒரு தனித்துவமான முத்திரை இருக்கும்.

இந்த உலகத்திலேயே குவென்டின் டாரண்டினோதான் அதிக நபர்களால் காப்பியடிக்கப்பட்ட இயக்குநராக இருப்பார். ஆனால், டாரண்டினோவின் பாணியை யாராவது அப்படியே போலி செய்ய முயலும்போது, 'ஏன் இவர்கள் இவ்வளவு மேலோட்டமாக காப்பி செய்கிறார்கள்?' என்று எனக்கு யோசனையாக இருக்கும்.

ஒரு படம் நீங்கள் நினைத்த வகையில் வருவதற்கு அந்த இயக்குநரின் ஆளுமைதான் காரணம். அதை வேறொருவரால் நிச்சயமாக உருவாக்க முடியாது. உங்களிடமும் நிச்சயமாக ஒரு தனித்துவமான முத்திரை இருக்கும், அதை நீங்கள் முயற்சி செய்து கண்டறிய முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நிவின் ப... மேலும் பார்க்க

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந... மேலும் பார்க்க

Drishyam 4: ``திரிஷ்யம் அடுத்த பாடம் வரும்" - தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உறுதி!

திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார்.கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெ... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதர... மேலும் பார்க்க

Bethlehem Kudumba Unit: " 'பிரேமலு 2' முடிந்து போன கதை!" - 'பிரேமலு' இயக்குநர் கிரிஷ் ஓபன் டாக்

'பிரேமலு' படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்திருக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் நாளை திரைக்கு வருகிறது.Premalu'பிரேமலு' கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்த... மேலும் பார்க்க

Mohanlal: 'ஆர்வம் தரும் கதைகள்'; ஒரே நேரத்தில் 7 இயக்குநர்களின் படம்; மோகன்லால் தந்த சர்ப்ரைஸ்!

நடிகர் மோகன்லால், தன்னுடைய அடுத்த 7 புதிய திரைப்படங்களை மொத்தமாக அறிவித்து ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், 'ஆர்வம் தரும... மேலும் பார்க்க