செய்திகள் :

Nepal Flood: "என் மனைவி பாதுகாப்பாக இருக்காங்க" - வெள்ளத்தில் சிக்கியிருக்கும் சிவரஞ்சனியின் கணவர்

post image

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர்.

அந்த வகையில் புனித யாத்திரை சென்ற திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவரது கணவர் முத்துநாதன் நேற்று (ஆக.26) பேட்டி அளித்திருந்தார்.

நேபாளம் வெள்ளப்பெருக்கு
நேபாளம் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி பாதுகாப்பாக இருப்பதாக முத்துநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

"என்னுடைய மனைவி சிவரஞ்சனி 23 ஆம் தேதி கைலாயம் புனித யாத்திரை மேற்கொண்டார். கும்பக்கோணத்தில் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலமாகச் சென்றார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் சென்றார். திபெத்திற்குச் செல்லும்போது இப்படி ஆகியிருக்கிறது.

நேற்று காலை 7.30 மணிக்கு ஃபோன் செய்து 'இங்கு நிலச்சரிவு. நாங்கள் இங்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்' என்றார்.

இந்த அளவிற்கு வீரியமாக இருக்கும் என்பது அப்போது தெரியவில்லை. நானும் நிலச்சரிவு தானே பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டேன்.

பிறகு மதியம்தான் மிகப்பெரிய திடீர் வெள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

சிவரஞ்சனியின் கணவர் முத்துநாதன்
சிவரஞ்சனியின் கணவர் முத்துநாதன்

அப்போது அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது என் மனைவி பாதுகாப்பாக இருக்கிறார்.

மற்றவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. அவர் ராணுவ முகாமில் இருக்கிறார். காணாமல் போனவர்களும் கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

டவர் இல்லாததால் அவரைத் தொடர்பு கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அனைவரையும் அரசு பத்திரமாக மீட்டுக்கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்..." - நடிகர் அங்குர் ரத்தன்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில... மேலும் பார்க்க

நேபாள வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி; 100 பேர் மாயம்; இந்தியர்களின் நிலை என்ன? | Latest Update

நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் போடேகோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் திபெத் திசையிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடப்படுவது ஏன்?

நேபாளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, கண்டக் நதியின் நீர்வரத்து திடீரென அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பீகார் அரசு கரையோர மாவட்டங்களுக்கு ... மேலும் பார்க்க

Nepal: "கண்முன்னே ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது” - கலங்கிய கும்பகோணம் ஏஜென்ஸி உரிமையாளர்

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏனென்ஸி பயணிகளை சுற்றுலா அழைத்துச் சென்று வரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்தச் சுற்றுலா ஏஜென்சிஸ் மூலம் தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், கும்பகோணம்,... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 8 பேர் பலி; 30க்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகியிருக்கின்றனர். மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் வெள்ளப்ப... மேலும் பார்க்க

கொலம்பியா: 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 111 பேர் பலியான சோகம்

மேற்கு கொலம்பியாவில் நேற்று இரவு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதாக 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கொலம்பியாவின்... மேலும் பார்க்க