900 மாணவிகள்... மூன்றே கழிப்பறைகள்... தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக...
Nepal: "கண்முன்னே ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது” - கலங்கிய கும்பகோணம் ஏஜென்ஸி உரிமையாளர்
கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏனென்ஸி பயணிகளை சுற்றுலா அழைத்துச் சென்று வரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்தச் சுற்றுலா ஏஜென்சிஸ் மூலம் தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த 57 பேர் கையாலாய யாத்திரைச் சென்றனர்.

கடந்த 23ம் தேதி சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்ட் சென்றுள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் மூன்று மினி பேருந்துகளில் சுற்றுலா சென்றவர்கள் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டனர்.
ஒரு பேருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டது. மற்ற இரண்டு பேருந்தும் அதில் இருந்தவர்களின் நிலையும் தெரியவில்லை. அந்த இரண்டு பேருந்தில் சுமார் 37 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் சுற்றுலா சென்றவர்களின் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். சுற்றுலா சென்ற சிவரஞ்சனி என்பவர் வாட்ஸ்அப் மூலம் ஆடியோ தகவல் அனுப்பி தங்களை மீட்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் லொக்கோஷைனையும் ஷேர் செய்திருந்தார் என்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 17 பேர் சென்றுள்ளதாக கும்பகோணம் தாசில்தார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சூப்பர் யாத்ரா ஏஜென்ஸியின் உரிமையாளர் சையத் சாதிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''கடந்த 23ம் தேதி கையாலய யாத்திரைக்காக தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேரை சுற்றுலா அழைத்துச் சென்றோம்.
டெல்லியிலிருந்து ஒரே விமானத்தில் காட்மண்ட் சென்று ரூம் ஏற்பாடு செய்து தங்க வைத்தோம். அன்று இரவு மீட்டிங் நடந்தது. அடுத்த நாள் காலை கைலாயத்திலிருந்து எல்லோரயும் கிளப்பி விட்டு விட்டு நான் கும்பகோணம் வந்தேன். மூன்று மினி பேருந்தில் சென்றனர். ஒரு பேருந்துக்கு ஒரு இன்ஜார்ஜ் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு கூட பேசினேன். எல்லாம் நல்லா போவதாகச் சொன்னார்கள்.

இன்று காலை சென்றபோது ஒன்பது மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அதிலிருந்து தப்பி விட்டோம் எனவும் ஒரு பேருந்தில் இருந்த இன்ஜார்ஜ் ரகு போன் செய்து சொன்னார். திரும்பிப் பார்க்கும்போது பின்னால் வந்த நம் பேருந்து பள்ளத்தில் விழுந்தது என்றார். ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பெரிய வெள்ள விபத்து. எவ்வளவு பேர் வருவார்கள்னு தெரியவில்லை. ஆண்டவன் தான் காப்பத்தணும்" என்றார்.















