செய்திகள் :

Nepal Flood: "நேபாளத்திற்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது"- பிரதமர் மோடி| live

post image

நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 105 இந்தியர்கள் உள்பட பல நூறு பேர் மாயமாகி உள்ளனர்.

16 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தவிர இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Nepal Flood
Nepal Flood

அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் துயர சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், " நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் பாலேந்திர ஷா அவர்களைத் தொடர்புகொண்டு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன்.

இந்த கடினமான நேரத்தில், இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர சகோதரிகளுடன் உறுதுணையாக நிற்கிறார்கள்.

நேபாளத்திற்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நமது குழுக்கள் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவித்திருக்கிறார்.

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" - தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது. மானியக் கோரிக்கை மீதான விவ... மேலும் பார்க்க

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் கைரேகை பதிந்திருக்க வேண்டும். இது குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்குத்தான் இந... மேலும் பார்க்க

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய 98 கிராமங்களைச் சேர்ந்த ம... மேலும் பார்க்க

பரந்தூர்: "நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.!"- பூவுலகின் நண்பர்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், "பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளைக் கைவிட்டதாக தமிழ் நாடு முதலமைச்சர... மேலும் பார்க்க

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? - ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, ஆன்லைனில் புதிய மின்சார இணைப்புகள் பெறும் அனைவருக்குமே இனி நேர... மேலும் பார்க்க

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு (தேமுதிக) என்ன அழைப்பு வரவில்லை என்று நினைக்க... மேலும் பார்க்க