செய்திகள் :

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து மக்கள் பிரச்னைகள் சார்ந்து பல கேள்விகளை எழுப்புகையில் துறை செயலாளர்களான அதிகாரிகள் அவைக்கே வருவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

உதயநிதி
உதயநிதி

இதுசம்பந்தமாக அவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''பேரவைத் தலைவர் அவர்களே உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் பல்வேறு விவகாரங்கள் சார்ந்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், அதைக் கவனிக்க இங்கே துறை செயலாளர்கள் அவர்களின் இடத்தில் இருப்பதே இல்லை. முதல்வரும் இல்லை. தலைமைச் செயலாளரும் அவையில் இல்லை'' என்றார்.

உடனே எழுந்த அமைச்சர் ஆதவ், ''முன்பு பேரவை நிகழ்வுகள் லைவ் செய்யப்பட்டதில்லை. இப்போது லைவ் கொடுக்கிறோம். அவைக்குப் பக்கத்திலேயே வார் ரூம் அமைத்திருக்கிறோம். அதிகாரிகள் அங்கே அமர்ந்து எல்லா நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றார்.

இதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் நேரு, "முன்பு வெளியில் பொது மக்களுக்குதான் லைவ் கொடுக்கப்படவில்லை. இங்கே உள்ளே லைவ் அவுட் கொடுக்கப்படத்தான் செய்தது. அப்படியிருந்தும் அதிகாரிகள் அவைக்குள் அவர்களின் மாடத்தில் அமர்ந்திருக்கத்தான் செய்வார்கள். துறை அதிகாரிகள் இங்கே இருந்து நோட் எடுக்க வேண்டும். இப்போது முதல்வரும் அவையில் இல்லை. தலைமைச் செயலாளரும் அவையில் இல்லை'' என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்த விவகாரத்துக்குப் பதிலளித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர், "திமுக ஆட்சியிலும் அவையில் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது. அப்போதைய அவை முன்னவர் துரைமுருகனும் சபாநாயகர் பழனிவேல் ராஜனும் கூட இதைப் பற்றி பேசியிருக்கின்றனர். முன்பும் இந்தப் பிரச்னை நடந்திருக்கிறது. இது சரி செய்யப்படும்" என்றார்.

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?' விஜய் - மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார்

சூடுபிடிக்கும் மதுரை அரசியல்!கோ.தளபதி எக்ஸிட்... பி.டி.ஆர் என்டரி..?சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என நினைத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென முடிவை மாற... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?" - கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் 'கடையடைப்பு' போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷிடம் துறை சார்ந்த நமது கேள்விகளை முன்வைத... மேலும் பார்க்க

"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" - சொல்கிறார் கே.எல்.சுதீஷ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.... மேலும் பார்க்க

"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விஸ்வநாதன் கவிதை நடையில் பேசினார். ஒரே வார்த்தையையும், வரியையும் இருமுறை கூறி வந்தார். அப்போது, "நீங்கள் ... மேலும் பார்க்க

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" - பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்தச் சுற்றறிக்கைக்க... மேலும் பார்க்க

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" - ஜக்கி வாசுதேவ்

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 133 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் நேபாளத்திற்குச் சென... மேலும் பார்க்க