செய்திகள் :

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" - ஜக்கி வாசுதேவ்

post image

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 133 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர்.

கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் நேபாளத்திற்குச் சென்றிருந்ததாக ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவருடைய எக்ஸ் தளப் பதிவு...

“திபெத் - சீனாவில் உள்ள கிராங் (Gyirong) பகுதியில் மிக மோசமான, சோகமான ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் எங்களது கைலாஷ் பயணக் குழுக்களில் ஒன்றும் சிக்கிக் கொண்டது.

நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு

என்ன நடந்தது?

அவர்கள் திரும்பக் கிளம்பிய சமயத்தில், இமிக்ரேஷன் அலுவலகத்தில் இருந்திருக்கின்றனர். அப்போதுதான் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அந்தக் கட்டடமும், நகரின் பெரும்பாலான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிகிறது.

தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவுக் குழுக்கள் உள்பட நாங்கள் அனைவரும் இதனால் மிகுந்த வேதனையடைந்துள்ளோம்.

மீட்புப் பணிகளுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

அந்த இமிக்ரேஷன் அலுவலகத்தில் இருந்தவர்கள் யாருடைய இருப்பிடம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் தயார்

எவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் நேரில் ஈடுபடத் தயாராக இருக்கிறோம்.

எங்களுடைய இந்தப் பயணத்தின் 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனர். 743 பேர் தற்போது திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும், 77 பேர் இமிக்ரேஷன் மையத்திலும், 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் திமுரே பகுதியிலும் உள்ளனர்.

எனக்கும் வலி

எங்களது குழுவில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிற மக்களுக்கும்... உங்கள் வலியை நான் உணர்கிறேன்.

இந்தத் துயரமான நேரத்தில் நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

தற்போதைய சூழலில் சாத்தியமான அனைத்துச் சிறந்த உதவிகளையும் செய்வதை உறுதிசெய்ய நான் தனிப்பட்ட முறையில் இந்தப் பகுதியில் களத்தில் இருக்கிறேன்.” என்றிருக்கிறார்.

"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" - சொல்கிறார் கே.எல்.சுதீஷ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.... மேலும் பார்க்க

"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விஸ்வநாதன் கவிதை நடையில் பேசினார். ஒரே வார்த்தையையும், வரியையும் இருமுறை கூறி வந்தார். அப்போது, "நீங்கள் ... மேலும் பார்க்க

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" - பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்தச் சுற்றறிக்கைக்க... மேலும் பார்க்க

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." - ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதன் பிறகு, அவருடைய மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் அடுத்த உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க