செய்திகள் :

`ஒரு எருமை மாட்டுக்கு உரிமை கோரும் இருவர்' - உரிமையாளரை முடிவு செய்ய டி.என்.ஏ. சோதனை

post image

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் அட்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுர் என்ற கிராமத்தில் ஒரு எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கோருவதால் பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இதே பகுதியை சேர்ந்த சூரஜ் யாதவ் என்பவரின் எருமை மாடு சமீபத்தில் காணாமல் போனது. அதனை யாதவ் பல இடங்களில் தீவிரமாகத் தேடினார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

எருமையைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நௌரங்கா டோலி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மன்ஜியின் வீட்டில் அந்த எருமை இருப்பதாக யாதவிற்கு தகவல் கிடைத்தது.

உடனே சூரஜ் அந்த கிராமத்திற்கு சென்று பிரகாஷ் வீட்டில் இருந்த எருமை மாட்டை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த எருமை மாடு தனக்குறியது என்று பிரகாஷ் தெரிவித்தார். எருமை மாடு தனக்கு உரியது என்று கூறி உள்ளூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.

அஜய் யாதவ்

உடனே போலீஸார் எருமை மாட்டுடன் போலீஸ் நிலையம் வரும்படி சூரஜிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சூரஜ் எருமை மாட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். மாடு போலீஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. சூரஜ் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடினர். அதோடு ஒரு பத்திரிகையாளர் எந்த அடிப்படையில் மாட்டை போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதால் மாட்டை சூரஜிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இதில் திருப்தியடையாத பிரகாஷ் இது குறித்து சூரஜ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் செய்தார்.

இப்பிரச்னை உள்ளூர் ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ.அஜய் யாதவ் என்பவரிடம் சென்றது. அஜய் யாதவ் இது குறித்து மாநில டிஜிபியிடம் இப்பிரச்னையை கொண்டு சென்றார். இது குறித்து அஜய் யாதவ் கூறுகையில்," ஒரு எருமை தொடர்பான தகராறில் எஸ்சி/எஸ்டி (SC/ST) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக ஒரு ஏழை நபர் செலவழிக்கும் பணத்தைக் கொண்டே இன்னொரு எருமையை வாங்கிவிட முடியும். போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீதும் கூட வழக்கு பதிவு செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.

இது தவிர ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவரும் டிஜிபியை சந்தித்து இது குறித்து பேசினார். இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண எருமை மாட்டிற்கு டி.என்.ஏ.சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு டிஜிபி உத்தரவிட்டார். காணாமல் போன மாட்டின் தாய் அதே கிராமத்தில் இருந்தது. எனவே அந்த மாட்டின் டி.என்.ஏ.வோடு ஒத்துப்பார்த்து மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படுமாம்.!

திருடுபோன Grey Parrot; கைகொடுத்த மைக்ரோசிப் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த செல்லக் கிளி!

இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் மோர்டிமர் என்பவர், தனது செல்லக் கிளியான ‘பார்னி’யை Grey parrot 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிகொடுத்தார். 2017-ம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, வீட்டில்... மேலும் பார்க்க

`மராத்தி கட்டாயம்' - ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தால் மும்பை மக்கள் பாதிப்பு

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் ஆட்டோ மற்றும் டாக்சியை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இயக்குவதாக ... மேலும் பார்க்க

துகாராம் முண்டே: அதிரடி ரெய்டுகளுக்கு பெயர் பெற்றவர்; நாற்காலித் துணியை அகற்றியதால் மீண்டும் வைரல்!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே, தற்போது மற்றொரு நிகழ்வுக்காகச் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார். செய்தியாளர் சந்... மேலும் பார்க்க

Miss Universe India 2026: ``மூன்றாண்டுக்கால உழைப்புக்குக் கிடைத்தது..!" - காசியா லிஸ் மேஜோ பேச்சு!

ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) Miss Universe India 2026-பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து 52 பேர் இறுதிப் போட்டியாளர்களாகப்... மேலும் பார்க்க

ஓணம்: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்; களைகட்டிய பூக்கள் விற்பனை! | Album

ஓணம் பண்டிகை: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்! களைகட்டிய பூக்கள் விற்பனை.! மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்த மூதாட்டி; மறைவுக்குப் பின் வீட்டில் கிடைத்த ரூ.8.40 லட்சம்! | Viral

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், யாசகம் செய்து வாழ்ந்து வந்த 68 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.40 லட்சம் பணம் மீட்ட்கப்பட்டிர... மேலும் பார்க்க