செய்திகள் :

திருடுபோன Grey Parrot; கைகொடுத்த மைக்ரோசிப் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த செல்லக் கிளி!

post image

இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் மோர்டிமர் என்பவர், தனது செல்லக் கிளியான ‘பார்னி’யை Grey parrot 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிகொடுத்தார். 2017-ம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த பொருள்களுடன் பார்னியும் திருடுபோனது.

பல ஆண்டுகளாக பார்னியைத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காலம் செல்லச் செல்ல, இனி தனது செல்லக் கிளியை மீண்டும் பார்க்க முடியாது என்ற எண்ணத்துக்கு ராபர்ட் வந்துவிட்டார். ஆனால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

பிராட்ஃபோர்டிலிருந்து (Bradford) சுமார் 20 மைல் தொலைவில் உள்ள IKEA பார்க்கிங் பகுதியில் ஒரு கிளி தனியாக சுற்றித் திரிவதை ஒருவர் கவனித்தார். தகவல் கிடைத்ததும், விலங்குகள் மீட்புக் குழுவினர் அந்தக் கிளியை மீட்டு பாதுகாப்பாக வைத்தனர்.

பின்னர் அந்தக் கிளியிடம் இருந்த மைக்ரோசிப்பை (Microchip) பரிசோதித்தபோது, அதன் பெயர் ‘பார்னி’ என்பது தெரியவந்தது. ஆனால், அதில் பதிவு செய்யப்பட்டிருந்த தொலைபேசி எண் பழையதாக இருந்ததால், உடனடியாக அதன் உரிமையாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து மீட்புக் குழுவைச் சேர்ந்த ஜெம்மா டம்பில், கிடைத்த தகவல்களை வைத்து இணையத்தில் தேடத் தொடங்கினார். காவல்துறையின் உதவியுடன் இறுதியில் ராபர்ட்டை கண்டுபிடித்து, “உங்கள் கிளி கிடைத்துவிட்டது” என்ற செய்தியைத் தெரிவித்தனர்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு பார்னி உயிருடன் இருப்பதை அறிந்த ராபர்ட்டுக்கு அது மிகப்பெரிய உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. பார்னியின் பெயரை அழைத்தபோது, அது திரும்பிப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

நீண்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது உரிமையாளருடன் மீண்டும் இணைந்த பார்னி, தற்போது தனது குடும்பத்திடமே திரும்பியுள்ளது.

`மராத்தி கட்டாயம்' - ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தால் மும்பை மக்கள் பாதிப்பு

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் ஆட்டோ மற்றும் டாக்சியை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இயக்குவதாக ... மேலும் பார்க்க

துகாராம் முண்டே: அதிரடி ரெய்டுகளுக்கு பெயர் பெற்றவர்; நாற்காலித் துணியை அகற்றியதால் மீண்டும் வைரல்!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே, தற்போது மற்றொரு நிகழ்வுக்காகச் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார். செய்தியாளர் சந்... மேலும் பார்க்க

Miss Universe India 2026: ``மூன்றாண்டுக்கால உழைப்புக்குக் கிடைத்தது..!" - காசியா லிஸ் மேஜோ பேச்சு!

ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) Miss Universe India 2026-பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து 52 பேர் இறுதிப் போட்டியாளர்களாகப்... மேலும் பார்க்க

ஓணம்: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்; களைகட்டிய பூக்கள் விற்பனை! | Album

ஓணம் பண்டிகை: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்! களைகட்டிய பூக்கள் விற்பனை.! மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் யாசகம் செய்த மூதாட்டி; மறைவுக்குப் பின் வீட்டில் கிடைத்த ரூ.8.40 லட்சம்! | Viral

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில், யாசகம் செய்து வாழ்ந்து வந்த 68 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.8.40 லட்சம் பணம் மீட்ட்கப்பட்டிர... மேலும் பார்க்க