செய்திகள் :

Toxic: "நான் கர்ப்பமாக இருந்த செய்தியை யஷிடம் சொன்னேன், அப்போது அவர்.!"- கியாரா அத்வானி நெகிழ்ச்சி

post image

‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கியாரா அத்வானி, " இந்தப் படத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திறமையான பல பெண் ஆளுமைகள் இணைந்து ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றியிருக்கிறோம்.

கியாரா அத்வானி
கியாரா அத்வானி

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகச் சிறந்த ஒரு மனிதர். அவருடன் பழகியது என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது.

ருக்மணி வசந்துக்கு மக்கள் கொடுக்கும் அன்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது, படத்தில் அவரது கதாபாத்திரம் அட்டகாசமாக வந்திருக்கிறது.

இந்திய சினிமா என்றென்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய ஒரு பெயர் 'கீது மோகன்தாஸ்'. என்னை ஒரு அச்சமற்ற கலைஞராக மாற்றியதற்கு அவருக்கு நன்றி. அதனால்தான் 'டாக்சிக்கிற்கு முன் கியாரா', 'டாக்சிக்கிற்குப் பின் கியாரா' என்று கூறுகிறேன்.

யஷ் நம்முடைய ராக்கி பாய், விரைவில் உங்களின் 'ராயா'வாக வரப் போகிறார்.

யஷ் உடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் நான் கர்ப்பமாக இருந்த செய்தியை குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக முதலில் யஷிடம் தான் கூறினேன்.

அப்போது அவர், 'படப்பிடிப்பு எப்படி நடக்கும்?' என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல், கண்களில் மகிழ்ச்சி கண்ணீருடன் என்னைக் கட்டித்தழுவி வாழ்த்தினார்.

யஷ்
யஷ்

'செட்டிற்கு வாருங்கள், உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ செய்து கொள்ளுங்கள், விருப்பமானதைச் சாப்பிடுங்கள். நாம் மிகச் சிறந்த படத்தை எடுப்போம்' என்று சொன்னார். அவர் ஒரு அற்புதமான மனிதர்.

நான் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன். 'ஷேர்ஷா' படத்தில் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணியாற்றியுள்ளேன். விரைவில் நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

Toxic: "'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று சொல்லலாம்; ஆனால்..." - விஜய் குறித்து யஷ்

‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய யஷ், "இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போது 'என் ரத்தத்தில் ரத்தமான' என்ற... மேலும் பார்க்க

Toxic: "தமிழ்நாட்டு மக்கள் காட்டும் அன்புக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது" - ருக்மணி வசந்த்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

தசாவதாரம் : தொழில்நுட்ப சாகசம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 18

`சினி'ஸ்கோப் 18தசாவதாரம் :சினிமாவின் தேவை என்ன? அதன் நோக்கம் என்ன? ஒரு சினிமா நமக்கு என்ன தருகிறது? முதலாவதும் முக்கியமானதும் ஆவது பொழுதுபோக்கு (Entertainment). பொழுதுபோக்கு என்பதை விடவும், எண்டர்டெயி... மேலும் பார்க்க

Paal Dabba: "த்ரிஷா மேடம் என் பாடலில் நடிக்க சம்மதித்ததே சிறப்பான ஒன்று!" - பால் டப்பா ஷேரிங்ஸ்

சுயாதீன இசைத்துறையில் பரபரப்பாக இயங்கி வரும் முக்கியமான குரல் `பால் டப்பா'. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பாடல்கள் செய்து வருகிறார். மற்றொரு பக்கம் தன்னுடைய அடுத்தடுத்த சுயாதீன பாட... மேலும் பார்க்க

"வாட்டர் கேன் போட்டிருக்கேன்; காஃபி டே-ல வேலை பார்த்திருக்கேன்" - 'மொத ராத்திரி' ரிஷிகாந்த்

நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் 'மொத ராத்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்திரு... மேலும் பார்க்க

`என் விசுவாசத்தைப் பார்த்து தனிக்கடை வச்சுக் கொடுத்திருக்கார் முதலாளி!' - 'காதல்' கரட்டாண்டி அருண்

'காதல்' படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் சிறுவன் கரட்டாண்டியாக நடித்தவர் அருண். அந்தப் படத்தின் ரீச் மூலம் 'சிவகாசி' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்தார். பிறகு திரையில் ஆளை... மேலும் பார்க்க