செய்திகள் :

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்..." - என்ன சொல்கிறார் உதயநிதி?

post image

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்.24) சென்னையில் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "இன்றைக்கு ஆளும் கட்சியாக வந்திருக்கக் கூடியவர்கள் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார்கள் என்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தேர்தலில் நாம் எதிர்பார்த்தது மிகப்பெரிய வெற்றி. மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் என ஒரு நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் என்ன பண்ணிவிட்டோம்...

தேர்தலில் எதிரி யார் என்று தெரியாமல் சண்டை போட்டுவிட்டோம். இன்றைக்கு யார் எதிரி என்று தெரிந்துவிட்டது. இதனால் மீண்டும் அந்தத் தவறை நம்ம செய்ய மாட்டோம். இந்தக் கிழக்கு மாவட்டத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நான் வந்து கலந்துகொண்டு இருக்கிறேன்.

ஆனால் ஒரு சிறிய இடைவேளை.. 4 மாதங்களுக்குப் பிறகு இந்தச் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்து இருக்கிறேன். சேகர்பாபு அவர்கள் நினைத்து இருக்கலாம்.

நான் அவர் மீது கோபத்தில் இருக்கிறேன். அதனால்தான் நான் வரவில்லை என்று... அது கோபம் இல்லை, வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை.

 சேகர்பாபு
சேகர்பாபு

சினிமா மாயை, கவர்ச்சி, இளம் தலைமுறையினர் சோஷியல் மீடியாக்களில் முழுக்க முழுக்க கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நம் தலைவர் அவர்களின் சாதனைகள் எல்லாம் இளம் தலைமுறையினர் இடையே போய் சேரவில்லை என எத்தனையோ காரணங்களை நாம் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம்.

இருப்பினும் கொளத்தூர் தோல்வியை ஏற்க முடியுமா? இது நமக்கு ஒரு பெரிய பாடம். 108 இடங்களில் தவெக வென்றது. நம் தயவில்தான் அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள்.

மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம்தான் செய்கிறார்கள். திமுக மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்தத் தோல்வியை எல்லாம் பார்த்து பயப்படாது" என்று பேசியிருக்கிறார்.

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" - முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியா... மேலும் பார்க்க

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திரு... மேலும் பார்க்க

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிர... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரி... மேலும் பார்க்க

ஆரணி: காதலிக்காகக் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை... சீரமைத்து புத்துயிர் கொடுத்த தமிழ்நாடு அரசு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை. சுமார் 200 ஆண்டு... மேலும் பார்க்க