செய்திகள் :

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

post image

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியாற்றி வரும் இரு பெண்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு புனே மாவட்டம் ஆகும். மற்றொருவருக்கு மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக இரண்டு பேரும் புனே வந்தனர். அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து வேலை தேட ஆரம்பித்தனர்.

அதோடு அவர்கள் போலீஸ் வேலைக்கும் தேர்வு எழுதினர். இத்தேர்வில் இரண்டு பேருக்கும் புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் வேலை கிடைத்தது. இதனால் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து ஒரின தம்பதியாக சேர்ந்து வாழ்ந்தனர்.

தங்களது இந்த இணைப்பைச் சட்டப்பூர்வமாக மாற்ற இரண்டு பேரும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ்களையும் அச்சடித்தனர்.

தங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இருவரும் திருமண அழைப்பிதழைக் கொடுக்க ஆரம்பித்தனர்.

இறுதியில் திருமணத்திற்கு விடுமுறை வேண்டும் என்று கோரி திருமண அழைப்பிதழுடன் தங்களது உயர் அதிகாரியைச் சந்தித்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது அதன் பிறகுதான் போலீஸ் நிலையத்தில் அனைவருக்கும் தெரிய வந்தது.

அதோடு இந்த விவகாரம் புனேயைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியவந்தது. அவர்கள் உடனே போலீஸ் நிலையத்திற்கு வந்து தகராறு செய்தனர். ஆனால் அங்கு இருந்த போலீஸார் இரு பெண்களின் முடிவில் தங்களால் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.

இருவரும் வரும் 30ம் தேதி திருமணம் செய்து கொள்ள தேதி குறித்து இருந்தனர். ஆனால் அதற்கான நேரம் நெருங்க நெருங்க திருமணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி அவர்கள் இரண்டு பேருக்கும் நெருக்கடி அதிகரித்தது.

குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் நெருக்கடி காரணமாக இரண்டு பெண்களும் தங்களது திருமணத்தை ரத்து செய்துவிட்டனர். ஆனால் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திரு... மேலும் பார்க்க

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிர... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரி... மேலும் பார்க்க

ஆரணி: காதலிக்காகக் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை... சீரமைத்து புத்துயிர் கொடுத்த தமிழ்நாடு அரசு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை. சுமார் 200 ஆண்டு... மேலும் பார்க்க

"தடைகள் வருவது தெரியும்; அதற்காகவே ஈரான் தயார் செய்த திட்டம்!" - ஈரான் சொல்லும் பிளான் என்ன?

ஈரானுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருக்கும் நாடுகள் அமெரிக்காவின் இரண்டாம் கட்டப் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கக்கூடும் என்று நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்... மேலும் பார்க்க