செய்திகள் :

"தடைகள் வருவது தெரியும்; அதற்காகவே ஈரான் தயார் செய்த திட்டம்!" - ஈரான் சொல்லும் பிளான் என்ன?

post image

ஈரானுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருக்கும் நாடுகள் அமெரிக்காவின் இரண்டாம் கட்டப் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கக்கூடும் என்று நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

யாரும் அமெரிக்காவைக் கண்டுகொள்ளவில்லை!

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

“அமெரிக்கர்களின் இந்த வீம்பான பேச்சுக்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களுக்கே தெரியும்.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்கா

மற்ற நாடுகளுடனான தன் உறவுகளை மேலும் சுருக்கிக் கொள்ளும் அளவுக்கு அமெரிக்கா நிதி நிலையில் வலுவாக இல்லை.

ஈரானின் வர்த்தகப் கூட்டாளிகள் ஊடகங்கள் மூலமாகவும், எங்களுக்கு அனுப்பிய செய்திகள் மூலமாகவும் அமெரிக்காவின் இந்த அறிவிப்புகளை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார் காலிபாஃப்.

ஈரானிடம் இரண்டு ஆண்டுகள் பிளான்

ஈரானியப் பொருளாதார அமைச்சர் அலி மதானிசாதே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்த பேட்டியில், “இந்த நாள்களுக்காக நாங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தோம்.

அவர்களின் திட்டங்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.

அரசாங்கத்திடம் இதற்கான இரண்டு ஆண்டு காலத் பிளான் இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஈரான் அரசாங்கம் முற்றிலும் தயார் நிலையிலேயே இருக்கிறது.

ஒருதுருவ உலகத்தின் (Unipolar world) காலம் முடிந்துவிட்டது. அதை அவர்கள் மீண்டும் ஒருமுறை உணர்வார்கள்.

அவர்கள் எதிலும் சற்றும் வெற்றி பெற முடியாது என்பதை அவர்களே காண்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஆக, ஈரான் அமெரிக்காவின் தடைகளுக்குத் தயாராகவே உள்ளது போலும்.!

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரி... மேலும் பார்க்க

ஆரணி: காதலிக்காகக் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை... சீரமைத்து புத்துயிர் கொடுத்த தமிழ்நாடு அரசு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை. சுமார் 200 ஆண்டு... மேலும் பார்க்க

TN Assembly: `கர்நாடகாவில் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களுக்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?' - உதயநிதி கேள்வி | Live

சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சுசட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களின் உடற்கூராய்வு ரிப்போர்ட் இப்போத... மேலும் பார்க்க

Operation Economic Outcast: 'ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்' - அமெரிக்கா கொடுக்கும் சாய்ஸ்கள் என்னென்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன. ராணுவத்தின் மூலம் ஈரானை அமெரிக்காவால் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இதனால், பொருளாதாரத் தடை அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா. கடந்த ப... மேலும் பார்க்க

'வாகனத்தில் செய்யும் ஒவ்வொரு உருமாற்றத்திற்கும் தனித்தனியாக அபராதம்' - கேரள ஐகோர்ட் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் ​மீட்புப் பணிக்காகச் சென்ற ஜீப் ஒன்றில் பல இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வாகன ஓட்டுநருக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் அ... மேலும் பார்க்க