செய்திகள் :

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

post image

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள் – வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர்கள் திட்டம்.

இந்த இரண்டு திட்டங்களுமே தவெக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட திட்டங்களே.

தேர்தல் வாக்குறுதியில் இந்தத் திட்டம் எப்படி அறிவிக்கப்பட்டிருந்தது... இப்போது அது எப்படி அறிவிக்கப்படுகிறது... இந்தத் திட்டங்களில் பயன்பெறத் தகுதிகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

வெற்றிப் பயணம்

இது தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 6,000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது.

இந்தத் திட்டம் சொல்வது என்ன?

இந்தத் திட்டத்தின் கீழ், மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.

மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாகப் புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், பெண்கள் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.

தகுதிகள் என்ன?

இந்தத் திட்டத்தில் பெண்கள் பயன்பெற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அதாவது வருமான உச்சவரம்பு, பயண எண்ணிக்கைகள் என எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

இந்தத் திட்டத்தில் திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணங்கள் மேற்கொள்ளலாம்.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டிருந்தது என்ன?

அரசுப் பேருந்து சேவைகள் அனைத்திலும் பெண்களுக்கான இலவசப் பயணம் அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் எந்தவொரு மூலையிலிருந்தும் எந்தவொரு பகுதிக்கும், மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களைக் கடந்து, எவ்வித நிதியச் சுமையுமின்றிப் பெண்கள் பயணிக்க முடியும்.

அத்துடன், நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, பேருந்துகளின் வசதியை மேம்படுத்துவதற்கான சூழலையும் நாங்கள் உருவாக்குவோம்.

சிலிண்டர்
சிலிண்டர்

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்

இந்தத் திட்டம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்தத் திட்டம் சொல்வது என்ன?

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகத் தமிழ்நாடு அரசால் வரவு வைக்கப்படும்.

தகுதிகள் என்ன?

ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாயக் குடும்பத்தினர், மாற்றுத் திறனாளிக் குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டிருந்தது என்ன?

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு ஆறு எல்.பி.ஜி (LPG) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

வங்கி
வங்கி

நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய்மார்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக இந்த முன்னெடுப்பை அறிமுகப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழகம் பெருமிதம் கொள்கிறது.

தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் அறிவித்திருந்த திட்டத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தை அப்படியே அமல்படுத்திவிட்டு, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தை மட்டும் சில மாற்றங்களுடன் அறிவித்துள்ளது.

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டார்கெட் வரிசையில் மிக முக்கியமான ஒன்று – ஹெச்-1பி விசா. சில மாதங்களாக, ஹெச்-1பி விசா குறித்து எதுவும் பேசா... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!' - சாடும் திமுக

புதுச்சேரியில் 2026-2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அது தொடர்பாக புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா... மேலும் பார்க்க

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' - அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கையில் ஒரு வார்த்தையை பயன்படுத்த, திமுக எம்.எல்.ஏக்கள் அதற்காக கடும் அமளியில் ... மேலும் பார்க்க

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்..." - என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" - முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியா... மேலும் பார்க்க