செய்திகள் :

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' - அவையில் கடும் அமளி!

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கையில் ஒரு வார்த்தையை பயன்படுத்த, திமுக எம்.எல்.ஏக்கள் அதற்காக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மதார் முஸ்தபா பேசுகையில் தவெகவையும் முதல்வர் விஜய்யையும் புகழ்ந்து பேசிவிட்டு, திமுகவை விமர்சிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

அந்த வார்த்தைக்கு ஆட்சேபனை தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் பர்வேஸ், தாஹிரா எம்.எல்.ஏ போன்றோரும் அதே விஷயத்தை குறிப்பிட்டு திமுகவை விமர்சிக்க, திமுக எம்.எல்.ஏக்கள் இன்னும் கடுப்பாகினர். அதனால் அவையின் முன்பக்கம் வந்து அமளியில் ஈடுபட்டனர்.

உடனே எழுந்த அமைச்சர் ராஜ்மோகன், ' வசந்தம் கார்த்திகேயனும் பூண்டி கலைவாணனும் அடிக்க பாய்கிறார்கள்' எனக் குற்றஞ்சாட்டினார். திமுக சார்பில் எ.வ.வேலுவும் தமீமுன் அன்சாரியும் அவர்களை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். பூண்டி கலைவாணன் மட்டும் சபாநாயகரின் இருக்கைக்கே சென்று முறையிட்டுவிட்டு வந்தார்.

திமுக சார்பில் எழுந்து பேசிய கோவி செழியனும் தமீமுன் அன்சாரியும் 'அவையில் பேசும் விஷயங்கள் வெளியில் அமைதியை குலைத்துவிடக் கூடாது' என எடுத்துக் கூறி நிலைமையை சரிப்படுத்தினார்.

இதன்பின்னரும் மதார் கண்ணீர் விட்டு சில ஆவேசமான கருத்துகளை பகிர, சபாநாயகர் அதைப் பற்றி பேச வேண்டாம் என கறாராக கூறினார்.

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்..." - என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" - முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியா... மேலும் பார்க்க

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திரு... மேலும் பார்க்க

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிர... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரி... மேலும் பார்க்க