செய்திகள் :

புதுச்சேரி: ``எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” - சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர்

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அரியாங்குப்பம் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அய்யப்பன் எம்.எல்.ஏ பேசிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய இருக்கையில் இருந்தபடி முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

அதைப்பார்த்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ``உறுப்பினர்கள் பேசும் போது அமைச்சர்கள் சட்டசபையில் இருக்க வேண்டும். அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடத்த கூடாது.

ரங்கசாமி - நமச்சிவாயம்

உறுப்பினர் பேசும்போது, சில கோரிக்கைகள் வைப்பார்கள், அதை அமைச்சர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். முதலமைச்சரின் காதோடு காதாக உள்துறை அமைச்சர் பேசினார். இந்த நெருக்கத்தை தேர்தல் நேரத்தில் காட்டியிருந்தால் எவ்வளவோ பிரச்னை தீர்ந்து இருக்கும்” என்றார்.

அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ``உறுப்பினர்கள் பலரும் வைக்கும் கோரிக்கையை முதலமைச்சருடன் பேசித்தான் தீர்க்க வேண்டும். அதைத்தான் முதலமைச்சரிடம் கூறிக் கொண்டிருந்தேன். எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது. சபாநாயகர் உட்பட ஒரு குழுவே அதன் பின்னால் இருக்கிறது” என்றார். அப்போது எழுந்த எதிர்கட்சித் தலைவர் நாஜிம், ``உள்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா...?” என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் மன்னிப்பு: ``இனி இதுபோல நடக்கக் கூடாது" - மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: ``நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" - நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் த... மேலும் பார்க்க

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள் – வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர்கள் திட்டம். இந... மேலும் பார்க்க

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டார்கெட் வரிசையில் மிக முக்கியமான ஒன்று – ஹெச்-1பி விசா. சில மாதங்களாக, ஹெச்-1பி விசா குறித்து எதுவும் பேசா... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!' - சாடும் திமுக

புதுச்சேரியில் 2026-2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அது தொடர்பாக புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா... மேலும் பார்க்க

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' - அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கையில் ஒரு வார்த்தையை பயன்படுத்த, திமுக எம்.எல்.ஏக்கள் அதற்காக கடும் அமளியில் ... மேலும் பார்க்க