செய்திகள் :

காஞ்சிபுரம்: சிசிடிவி-யில் ஸ்பிரே பெயின்ட்; ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

post image

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சிசிடிவி கேமரா-க்களில் தங்களின் முகம் தெரியாமலிருக்க ஸ்பிரே பெயிண்ட்டை அந்தக் கும்பல் அடித்திருக்கிறது. மேலும் கொள்ளை நடக்கும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரத்தின் இணைப்பையும் அந்தக் கும்பல் துண்டித்திருக்கிறது. இன்று காலை (25.8.2026) ஏ.டி.எம் மையத்துக்கு பணம் எடுக்க சென்ற ஒருவர்தான் கொள்ளை நடந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.

உடைக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்

இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிந்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், கொள்ளை எப்படி நடந்தது என ஆய்வு செய்தனர். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கும்பல், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம்மில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவில்லை. வங்கி அதிகாரிகளின் ஆய்வுக்குப பிறகுதான் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நில... மேலும் பார்க்க

நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்... மேலும் பார்க்க

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'- அன்று போலீஸை அடித்த ஆகாஷ்

தஞ்சாவூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதில் விசிக-வினர் வைத்த ஃப்ளக்ஸ் அகற்றப்பட்டதால் அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் ந... மேலும் பார்க்க

கடலூர்: `அண்ணிக்கு என்னைத்தான் பிடிக்கும்!’ - அண்ணனை `ஸ்கெட்ச்’ போட்டு முடித்த உடன்பிறவா தம்பி

கடலூர் மாவட்டம், ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா கட்டுமானப் பணிகள் செய்யும் கூலித் தொழிலாளி. இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினிதா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து, கடந்த 2016-ம... மேலும் பார்க்க

சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை - த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை என்பவரின் மகளை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் க... மேலும் பார்க்க

மும்பை: பேஸ்புக் லிங்க்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.50 லட்சம்; முன்னாள் வங்கி அதிகாரியிடமே மோசடி

மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரி(70) என்ற பெண் மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகையை வங்கிகளில்... மேலும் பார்க்க