செய்திகள் :

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: ``நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" - நயினார் நாகேந்திரன்

post image

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``கர்நாடக வனத்துறையின் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற திரு. ஜோசப் விஜய் வலியுறுத்த வேண்டும்! கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் அம்மாநில வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் விவசாயிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ‘போலி என்கவுண்டர்’ என்பதை நிரூபித்து, அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

10 அடிக்கும் குறைவான, மிக நெருக்கமான தொலைவிலிருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பது வனத்துறையின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக காவல்துறையின் விசாரணையில் துளியும் நம்பிக்கையில்லை. எனவே உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரவும் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும்.

தவெக அரசு இந்த விஷயத்தில் மெளனம் காப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்யும் துரோகமாகும். எனவே, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தனது கூட்டணிக் கட்சி ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள் – வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர்கள் திட்டம். இந... மேலும் பார்க்க

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டார்கெட் வரிசையில் மிக முக்கியமான ஒன்று – ஹெச்-1பி விசா. சில மாதங்களாக, ஹெச்-1பி விசா குறித்து எதுவும் பேசா... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: `ரூ.14,300 கோடியில், வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2,200 கோடிதான்!' - சாடும் திமுக

புதுச்சேரியில் 2026-2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அது தொடர்பாக புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா... மேலும் பார்க்க

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' - அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கையில் ஒரு வார்த்தையை பயன்படுத்த, திமுக எம்.எல்.ஏக்கள் அதற்காக கடும் அமளியில் ... மேலும் பார்க்க

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்..." - என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" - முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க