செய்திகள் :

"செல்போன் டவர் வைக்க ரூ.15 லட்சம் தரோம்; ஆனா..." - தொழிலாளரிடம் ஆன்லைன் மோசடி; என்ன நடந்தது?

post image

திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, அவர் அந்த மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், 'செல்போன் டவர் அமைக்க உங்களிடம் நிலம் உள்ளதா?' எனக் கேட்டுள்ளார்.

அதற்கு மலர்மன்னன், தனது மனைவி பெயரில் நிலம் திருச்சியில் உள்ளது எனத் தெரிவித்தார். உடனே, அந்த மர்ம நபர் நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார்.

பின்னர், 'செல்போன் நிறுவனம் மூலமாக ரூ. 15 லட்சம் முன்பணமாகச் செலுத்த இருக்கிறோம். அதற்கு ஆவண கட்டணமாக ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

trichy

இதனை நம்பிய மலர்மன்னன் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்குக்குக் கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.2 லட்சத்தை அனுப்பினாா். ஆனால், அதன்பிறகும் அந்த மா்ம நபா் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தபோதுதான் இவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவில் இணையதளம் வழியாக மலா்மன்னன் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி: கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது: 31). இவர், ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைக் காதலித்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை; 22 வயது இளைஞர் கைது

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம், காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது: 22). இவர், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். பின்னர், அந்தச... மேலும் பார்க்க

திருச்சி: டிப்பர் லாரி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை; இளைஞரின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம், கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு இளைஞர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் திடீரென்று செல்போனைக் கீழே போட்டுவிட்டு, அ... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது; மற்றொரு இளைஞரைத் தேடும் போலீஸ்

​அரியலூர் மாவட்டம், திருமனூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் அசிஸ்டன்ட் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக, அங்குள்ள தனியார் மகளிர் விட... மேலும் பார்க்க

பாலியல் குற்றாவாளிக்கு 17-வது முறை பரோல்: ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்பது வெறும் வார்த்தை தானா?

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தற்போது 17-வது முறையாக பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறார்... மேலும் பார்க்க

தொழிலுக்காக தந்தை வைத்திருந்த ரூ.50 லட்சம்; லாக்கரை திறந்து எடுத்து காதலிக்கு செலவு செய்த இளைஞர்!

அசாம் மாநிலம் ஜோர்ஹட் என்ற இடத்தை சேர்ந்த யஷ் தனுகா அகர்வால்(25) என்ற வாலிபர், தனது குடும்பத்தினரின் லாக்கரை உடைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள... மேலும் பார்க்க