செய்திகள் :

திருச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது; மற்றொரு இளைஞரைத் தேடும் போலீஸ்

post image

​அரியலூர் மாவட்டம், திருமனூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் அசிஸ்டன்ட் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இதற்காக, அங்குள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் சிறுமி விடுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளார்.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஜூலை 20-ம் தேதி தஞ்சாவூர் டாண்டெக்ஸ் ரவுண்டானா அருகே இருந்த சிறுமியை தமிழ்ப் பல்கலைக்கழக பெண் காவலர் மீட்டு விசாரணை நடத்தினார். அவரது விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

சில மாதங்களுக்கு முன்பு சிறுமி தன் குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தபோது, அங்குத் தற்காலிகக் காவலராகப் பணிபுரிந்த திருச்சி மாவட்டம், மருதூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது: 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து, தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டட இளைஞர்
கைது செய்யப்பட்டட இளைஞர்

இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி தமிழ்ச்செல்வன் அழைத்ததின் பேரில் சிறுமி தஞ்சாவூரிலிருந்து பேருந்து மூலம் சமயபுரம் சென்றுள்ளார். அங்குச் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற தமிழ்ச்செல்வன், தனது நண்பர் ஆகாஷ் என்பவருடன் சேர்ந்து சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

அங்கு சிறுமியைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற இடம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், இந்த வழக்கு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து, காணாமல் போன வழக்கை போக்ஸோ சட்டப்பிரிவாக (U/s 5(l) r/w 6(1) POCSO Act) மாற்றம் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளியான (A1) தமிழ்ச்செல்வனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள இரண்டாம் குற்றவாளியான (A2) ஆகாஷ் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கோயில் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது: 31). இவர், ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர... மேலும் பார்க்க

"செல்போன் டவர் வைக்க ரூ.15 லட்சம் தரோம்; ஆனா..." - தொழிலாளரிடம் ஆன்லைன் மோசடி; என்ன நடந்தது?

திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைக் காதலித்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை; 22 வயது இளைஞர் கைது

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம், காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது: 22). இவர், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். பின்னர், அந்தச... மேலும் பார்க்க

திருச்சி: டிப்பர் லாரி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை; இளைஞரின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம், கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு இளைஞர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த இளைஞர் திடீரென்று செல்போனைக் கீழே போட்டுவிட்டு, அ... மேலும் பார்க்க

பாலியல் குற்றாவாளிக்கு 17-வது முறை பரோல்: ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்பது வெறும் வார்த்தை தானா?

பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தற்போது 17-வது முறையாக பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறார்... மேலும் பார்க்க

தொழிலுக்காக தந்தை வைத்திருந்த ரூ.50 லட்சம்; லாக்கரை திறந்து எடுத்து காதலிக்கு செலவு செய்த இளைஞர்!

அசாம் மாநிலம் ஜோர்ஹட் என்ற இடத்தை சேர்ந்த யஷ் தனுகா அகர்வால்(25) என்ற வாலிபர், தனது குடும்பத்தினரின் லாக்கரை உடைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள... மேலும் பார்க்க