செய்திகள் :

மணல் திருட்டு; அபேஸான கும்பல்... மாட்டு வண்டிகளை ஸ்டேஷனுக்கு ஓட்டிவந்த போலீஸ்!

post image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு அதிரடியாக அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது கிளியூர் பாலத்தில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். போலீஸாரைக் கண்டதும் 4 மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகளையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மாட்டு வண்டிகள்

பின்னர், அவற்றை ஒரு வழியாக திருவெறும்பூர் போலீஸார் தாங்களே வண்டிகளில் மாடுகளை பூட்டி, பிறகு ஓட்டிக்கொண்டு திருவெறும்பூர் காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும், தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீஸார் யூனிஃபார்மில் ஓட்டி வந்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

மதுரை: மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற மகன்; அடித்துக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள்(50). இவரது கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார். ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியைப் பிரி... மேலும் பார்க்க

`கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!

ஹரியான பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் (32) உத்தரப்பிரதேசத்தில் ஜிம்மிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாம்லி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி என்ற நகரில் உள்ள ஆர்யபுரி ... மேலும் பார்க்க

திருச்சி: ரயில்வே பாதுகாப்பு படையின் முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் திடீர் மரணம்

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர், ஆதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( 70). இவர், ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு ... மேலும் பார்க்க

திருச்சி: கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது: 31). இவர், ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர... மேலும் பார்க்க

"செல்போன் டவர் வைக்க ரூ.15 லட்சம் தரோம்; ஆனா..." - தொழிலாளரிடம் ஆன்லைன் மோசடி; என்ன நடந்தது?

திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியைக் காதலித்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை; 22 வயது இளைஞர் கைது

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம், காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது: 22). இவர், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். பின்னர், அந்தச... மேலும் பார்க்க