செய்திகள் :

``மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" - மாணிக்கம் தாகூர்

post image

மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ₹5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பிரதமர் மோடி

தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ₹1,788 கோடி, 2025-26 இல் ₹1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ₹1,825 கோடி என மொத்தம் ₹5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ₹714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.

மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ₹2,014 கோடியையும், நடப்பாண்டில் ₹647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, PM-SHRI மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ₹5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'இது சட்டமன்றமா... இல்ல சண்டை மன்றமா?' - திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா அவையில் திடீரென, 'இது சட்டமன்றமா இல்லை சண்டை மன்றமா...' என கொந்தளித்திருக்கிறார்.சட்டமன்றம்சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறத... மேலும் பார்க்க

``இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம் இணைந்து செயல்பட வேண்டும்"- நேபாள அமைச்சர்

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அதில் 133 பேர் இந்தியர்கள். நேற்று நடந்த இந்தச... மேலும் பார்க்க

``சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல" - சிபிஐ வீரபாண்டியன்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்திய... மேலும் பார்க்க

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?' விஜய் - மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார்

சூடுபிடிக்கும் மதுரை அரசியல்!கோ.தளபதி எக்ஸிட்... பி.டி.ஆர் என்டரி..?சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என நினைத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென முடிவை மாற... மேலும் பார்க்க

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து மக்கள் பிரச்னைகள் சார்ந்து பல கேள்விகளை எழுப்புகையில் துறை செயலாளர்களான அதிகாரிகள் அவைக்கே வருவதி... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?" - கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் 'கடையடைப்பு' போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷிடம் துறை சார்ந்த நமது கேள்விகளை முன்வைத... மேலும் பார்க்க